100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’

harishMSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ ஜம்போ 3D ‘.இயக்குநர்கள்  ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .’ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல்நாத் மீண்டும் கதாநாயகன் வேடம் ஏற்கிறார். இவருடன் சுகன்யா , பேபி ஹம்சிகா , அஞ்சனா , லொள்ளுசபா ஜீவா ,  ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் ‘கும்கி’ அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர் .

” ஜம்போ என்ற ஜம்புலிங்கம் ஆக வரும் கோகுல்நாத் Mime-slapstick எனும் நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் பேபி ஹம்சிகா துடுக்கான குழந்தை கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். இப்படம் , குழந்தைகளை கவரக்கூடியதாய் அமையும். 100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள இப்படத்தை முழுக்க ஜப்பானில் 40 நாட்கள் படமாகபட்டுள்ளது.” என்கின்றனர் ஹரி-ஹரிஷ் இரட்டையர்கள்.

படத்தின் தயாரிப்பாளர் G ஹரி குறிப்பிடுகையில் , ” நல்ல குடும்பத் திரைப்படமாக அமைந்துள்ள இப்படம் குழந்தைகளைக் கவரும் . இந்திய-ஜப்பானிய கலாச்சாரத்தை பறைசாற்றக் கூடிய வகையில் படமாக்கபட்டுள்ளது. இக்குழுவினரின் கடின உழைப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.  ஜப்பானியர்கள் நடித்துள்ளதால்  இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்றார் .

” இப்படம் முழுக்க முழுக்க ஜப்பானின் அழகுமிக்க நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது . அது மட்டும் இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தையும் இந்திய மக்கள் அறியும் வகையில் உள்ளது. நடிகர் ரஜினி நடித்த படங்களுக்கு பிறகு குறிப்பாக ‘முத்து’ படத்திற்கு பிறகு ஜம்போ 3D பேசப்படும்” என்று பெருமிதத்துடன் கூறினார் ஜப்பான் நாட்டை சேர்ந்த, படத்தின் இணை தயாரிப்பாளர் ஓகிடா.

ஒளிப்பதிவாளர் சதீஷ் படப்பதிவு பற்றி கூறுகையில் ” ஜப்பானிற்கு 3D சுற்றுலா சென்றது போல் ஓர் அனுபவம் கிடைக்கும்” என்றார்.Jumbo-3D-44

” 3 பாடல்கள் நன்றாக வந்துள்ளன . பாடல் ஆசிரியராக அறிமுகமாகும் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ஒரு பாடலை எழுதியுள்ளார், வெங்கட் கைவண்ணத்தில் பின்னணி இசை படத்திற்கு மெருகேற்றுகிறது  ” என்றார்  பெண் இசையமைப்பாளர் ஸ்ரீவித்யா.

“என்னை நானாக வலம் வர செய்துள்ளனர் இயக்குநர்கள் . இப்பாணியிலான நடிப்பு மொழிகளை கடந்து எல்லா நாட்டவரையும் ரசிக்க செய்யும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் பெரும்பகுதி ஆக்ஷன் மற்றும் நடன அசைவுகள் நானே செய்திருக்கிறேன். இந்த படம் குழந்தைகளுக்கான படமாய் அமையப் போகிறது.” என்று கூறினார் நாயகன் கோகுல்நாத்.

குழந்தை நட்சத்திரம் பேபி ஹம்சிகா தனது முதல் பட அனுபவத்தை விவரிக்கையில்,  ” பெரிய கேமிராக்கள் பார்த்து பயந்த என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்கள் இயக்குநர்கள். சுகன்யா மேடம் உடன்  பரதம்  ஆடியது என்னால்  மறக்கமுடியாத அனுபவமாக  உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜம்போ 3D படத்தின் மூலம் திரையில் தோன்ற உள்ளாதாகவும். தனக்கு அது மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும். ஜப்பானில் எந்திரன் ரஜினியாக வேடம் போடும் மேடை கலைஞாக நடித்திருப்பதாகவும்  கூறினார் லொள்ளுசபா ஜீவா

நகைச்சுவை நடிகர் ஈரோடு மகேஷ் “குழந்தைகளை கவரும் இந்த திரைப்படம்.மேலும், எனக்கு ஜப்பானிய நடிகர்களுடன் நடித்தது புதுமையான அனுபவமாக அமைந்தது”என்றார்.