1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா !

IMG_82731000 படங்களின் பாடல் உரிமையும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார்  இளையராஜா .இது பற்றிய தகவல் வெளியான விவரம் வருமாறு:

‘சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ‘என்கிற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. எஸ் எஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களில் பலரும் ‘அட்டகத்தி’ ரஞ்சித்தின் ஜூனியர்ஸ்.
படத்தை  இயக்கியுள்ள இயக்குநர் சத்திய மூர்த்தி சரவணன் பிரகாஷ்ராஜிடம் பணியாற்றியவர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது .அப்போது படம் பற்றி இயக்குநர் கூறும்போது “இது ஒரு புதிய முயற்சி. நேர்மையான முயற்சி. ரசிகர்களை நம்பி செய்துள்ளோம். இந்தக்கதை ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு பேசும்போது” இந்த புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் வருகின்றன. ஆனால் வெளிவர முடியாமல் தவிப்பது சின்ன படங்கள்தான். பல சின்ன படங்கள். வெளிவர முடியாமல் கிடக்கின்றன. அது மட்டுமல்ல சாட்டிலைட் உரிமையும் வாங்கப்படுவதில்லை. அவை  வெளிவர விரைவில் பொதுக் குழு கூடி முடிவு எடுப்போம்.

இசைஞானி தன் 1000 படங்களின் பாடல் உரிமைகளையும் சங்கத்துக்கு தருவதாகக் கூறியிருக்கிறார். இது பற்றி பேச்சு வார்த்தையில் உள்ளது. அவருக்கு விரைவில் விழா எடுக்கவுள்ளோம்.  “இவ்வாறு தாணு பேசினார்.