கமல் முயற்சி : 10,000 சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி !

kamal10திரைத்துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.

 

இதனால் அகிலஇந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன்சபையின் தலைவர் கமல்ஹாசனின் வழிகாட்டுதலின் படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப்பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10,000  தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத்துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

 

இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

 

ஊடகம் மற்றும் பொழுது போக்குதிறன்சபை இந்தியதொழில் மற்றும் வர்த்தககூட்டமைப்பின் ஓர்அங்கமாகும். இதன்மூலம் 2022-ஆம்ஆண்டுக்குள் 11.24 லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் இந்தசபைபிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ்யோஜ்னா திட்டத்தில்பங்கேற்று இந்தியா முழுவதிலும் 5000 மாணவர்களுக்குபயிற்சிஅளிக்கவுள்ளது.