150 கோடி வசூல் சாதனை செய்த மோகன்லால் படம் ‘ புலிமுருகன் ‘

mohanlal4சின்ன மாநிலம் சின்ன பட்ஜெட் படங்கள்.. இமாலய சாதனை என்பது மலையாளத் திரைப்பட வரலாறு. அதை முறியடித்த பெருமை “ புலிமுருகன்” படத்தையே சாரும்.

சமீபத்தில் வெளியான ‘புலிமுருகன்’ படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் இவ்வளவு பட்ஜெட்டா ? தாங்குமா ? வசூலாகுமா ? என்று புலம்பியவர்கள் வசூல்சாதனை 150 கோடியைத் தாண்டியதும் வாய் பிளந்தார்கள்  மலையாளத் திரையுலகின் அதிக பட்ஜெட் படம், அதிக வசூல் படம் என்கிற இரண்டு பெருமையுமே புலிமுருகன் என்கிற இந்தப் படத்தையே சேரும்.
mohanlal444படத்தின் கதையம்சம் இதுதான். ஒரு புலி தனது  தந்தையை தன்  கண்ணெதிரே அடித்துக் கொன்றதை பார்த்த சிறுவன் ஒருவன், அதே புலியை கொன்று பழி தீர்க்கிறான். அதற்கு பிறகு புலிகளிடமிருந்து அந்த கிராமத்தை பாதுகாக்கும் சிறுவன் வளர்ந்து பெரியவனான பிறகும் அதே பணியைச் செய்கிறான்.  அவர் எப்படியெல்லாம் புலிகளுடன் போராடுகிறார் என்பது பரபரப்பான திரைக்கதை. புலிகளுடன்  மோகன்லால் போராடும் நான்கு ஸ்டன்ட் காட்சிகள் திடுக்கிட வைக்கும்.

புலியுடன் மோகன்லால் மோதும் கிளைமாக்ஸ் ஸ்டன்ட் காட்சி 96 நாட்கள் ஹாலிவுட் தரத்துடன் பீட்டர் ஹெய்ன் உருவாக்கியுள்ளார். புலிமுருகன் தெலுங்கில் மன்னியம் புலி என்ற பெயரில் வெளியாக சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. தமிழிலும் வீரப் பாய்ச்சலாக புலிமுருகன் விரைவில் வெளிவர உள்ளது.
namee-lalமோகன்லாலின் கிரீடத்திற்கு உரிய புலிமுருகன் அதே பெயரில் தமிழில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறது. கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடித்திரு க்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது. புலிமுருகன் படத்தின் வசனத்தை ஆர்.பி.பாலா எழுதி இருக்கிறார்.

இந்த பிரமாதமான படத்தை இயக்கி இருப்பவர்  –   வைஷாக்