1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி!

iidupuரசிகர்களை  தனது  உக்கிரமான நடிப்பில் ‘பாகுபலி’  மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களின் மூலம் கவர்ந்த்த அனுஷ்கா ஷெட்டி, பி வி பி சினிமா தயாரித்து வழங்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் நவம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் .உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  ஒரே நாளில் 1500 screens திரையிடப் பட  உள்ளது.தொடரும்  மாபெரும் வெற்றிப் படங்களால் ஒரு சூப்பர்  ஸ்டார் அளவுக்கு உயர்ந்து  உள்ள அனுஷ்கா , இஞ்சி இடுப்பழகி மூலம் மேலும் தன்னுடைய ஆளுமையை பதிய வைக்க இருக்கிறார்.இதுவரை வெளி  வந்தப்  படத்தின் First look மற்றும் டீசர்  பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.பி வி பி நிறுவனத்தினர்  இந்தப் படம் ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து ரசிக்கக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

ஆர்யா, அனுஷ்கா ,சோனல் சௌஹான்,பிரகாஷ் ராஜ்,ஊர்வசி,பரத்,மற்றும் பலர் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ நவம்பர் மாதம் 27ஆம் தேதி வெளி ஆகும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.
பிரகாஷ்  கொவில முடி இயக்கத்தில்,பி வி பி சினிமா தயாரிப்பில் , மனதை மயக்கும் மரகத மணியின் இசையில், கனிகா தில்லான் கொவிலமுடி கதை வடிவத்தில், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், ஆர் எஸ் பிரசன்னாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல்களில் உருவாகி உள்ள ‘இஞ்சி இடுப்பழகி’  பெரும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் படப்பிடிப்பு குழுவினர்.