15000 சதுர அடி பரப்பளவில் ஆரம்பமாகும் ‘knack ஸ்டுடியோஸ் !

063f7dd7-a949-4090-9de8-67a0e16ae6c2தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது.  அதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குநர்கள் பிரியதர்ஷன், ஐ.வி.சசி, ஞான ராஜசேகரன், விக்னேஷ் சிவன், ரவி ராகவேந்திரா, ஷோபா சந்திரசேகரன், லக்‌ஷ்மி சிவகுமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

4cfb4ec6-2c76-44e2-a1aa-d34d6f32c88aவிழாவில் ‘knack ஸ்டுடியோஸ்’ லோகோவை நடிகர் சூர்யா வெளியிட, சவுண்ட் ஸ்டுடியோவை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும், வீடியோ பிரிவை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய knac ஸ்டுடியோவின் நிறுவனர் ஆனந்த பத்மநாபன், “இங்கு திரையுலகின் முக்கியமான ஜாம்பவான்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கடையில் வாடிக்கையாளர் முன்பு எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் நான் நடிகனாக இருந்தேன். என் மகன் நடிகர்களோடே தொடர்பில் இருந்தான்.

4fef1692-c110-4377-9d3e-fad331278be6மயிலாப்பூர் மாதிரி படித்தவர்கள் அதிகம் வாழும் இடத்தில் கடையை திறம்பட நடத்துவது மிகவும் கடினம். அதை செய்து காட்டினோம். அதன் பிறகு நிறைய கிளைகளை ஆரம்பித்தோம். ஒரே நேரத்தில் மூன்று கடைகளை திறப்பேன் என்று என் மகனிடம் சொன்னேன். காஞ்சிபுரம், பெரம்பூர், வேளச்சேரி என மூன்று கடைகளை ஒரே நாளில் திறந்தோம். தன்னம்பிக்கை தான் அதை சாத்தியப்பட வைத்தது. என் மகம் ஸ்டைலோரி என்ற ஃபேஷன் ஸ்டோரை ஆரம்பித்தான். அதுவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தொழிலில் பல நுணுக்கங்களை கையாண்டு தான் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். அதுபோலவே குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுப்போம்” என்றார்.

367e0c1f-4cab-4367-b3a9-55950d9ffeacநாக் ஸ்டூடியோஸ் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் பேசும்போது, “தி.நகர் கிளையை ஆரம்பிக்கும் முழுப்பொறுப்பையும் அப்பா என்னிடம் ஒப்படைத்தார். அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினேன். அதை தொடர்ந்து knack ஸ்டுடியோஸ் ஆரம்பிக்கும் எண்ணத்தை சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக சம்மதித்தார். ஆபரண துறையில் என்ன தரத்தை கொடுத்தோமோ, அதை சினிமா துறையிலும்  கொடுப்போம்.knack ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் வந்தன. ஆடியோகிராஃபர் ஸ்ரீதர் சாரின் மகன் வினய் தான் இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்க முக்கிய காரணம்” என்றார்.

2b1d7f10-8f9a-40e4-8524-350554365b95உதவி இயக்குநராக இருந்த நான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் ஹார்ட் டிஸ்க்கை தூக்கிக் கொண்டு அலைந்தேன். அப்போது ஒரே இடத்தில் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அதன்படி அமைந்த ஸ்டுடியோ தான் இந்த knack ஸ்டுடியோஸ். வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில், அவர்கள் விரும்பும் வகையில் ஸ்டுடியோவை அமைத்திருக்கிறோம் என்றார் நாக் ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் ராம்.

 

Pin It

Comments are closed.