2016 டிசம்பர் சீசன் ‘சென்னையில் திருவையாறு’ முழு விவரம்!

lakshman2016 டிசம்பர் சீசன் ‘சென்னையில் திருவையாறு’  பற்றிய முழு விவரமாக அதன் அமைப்பாளர்கள் கூறுவதாவது:

எங்கள் கற்பனைகளையும் கனவுகளையும் செயலாக்கம் செய்கின்ற வேளையில் தோள் கொடுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள்,
தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன. அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால்  தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” என்பதை யாரும் மறுக்க  இயலாது.
அவ்வரிய முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பதினோரு வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழாவினை “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.
பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இசைத்துறையில் வித்வத்தன்மை கொண்டோரையும், வித்தியாசமான ரசிப்புத்தன்மை கொண்டோரையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும்  தேர்வுக்குழுவாய் அமைத்து,  எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் “சென்னையில் திருவையாறு” விழா!
ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில்  நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு” விழா திகழ்கிறது.
இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பனிரெண்டு. இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 11.00 மணிக்கு  ”திருப்பாம்புரம் டி.எஸ்.எச்.ராமநாதன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
”சென்னையில் திருவையாறு”  –  ஒரு சிறிய அறிமுகம்
‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது, எப்படி வடிவமைக்கப்பட்டது?  என்பதற்கான ஒரு சிறு விளக்கம்தான் இந்த அறிமுகம்.

”லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) சார்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதிதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவரது மனமும் இசையோடு ஒன்றி, அமைதியும் ஆனந்தமும் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.
திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.
அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி  உருவாக்க எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீதியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும், அந்த விழாவுக்கு “சென்னையில்-திருவையாறு” என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.
மார்கழியும் இசையும்
இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு’ விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்…
·    சங்கீதம் இறைவனின் பேச்சு
·    சங்கீதம் சாமானியனுக்கும் சர்வேஸ்வரனுக்குமான நேரடித் தொடர்பு
·    சங்கீதம் கண்ணுக்குப் புலப்படாத கருணை ஊற்று
·    சங்கீதம் உடைந்த உள்ளத்திற்கு மருந்து
·    சங்கீதத்திற்குக் கட்டுப்படாதவரையும், தலைவணங்காதவரையும் காண்பது சாத்தியமே இல்லை.
·    இசை என்ற ஒன்று இல்லாமல் இவ்வுலகில் ஆலயமோ, திருச்சபையோ, பள்ளிவாசலோ, குருத்வாராவோ கிடையாது.
சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும் இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்கக்கூடியது.எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே.
இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை.இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது  மிகையாகாது. உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி. அதையடுத்து  பொதுவான  மொழியென்றால் அது இசை ஒன்றே.
இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் ‘பருவம்’ என்ற ஒரு குறிப்பிட்ட காலத்தை  உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள்  என படைத்துள்ளான்.  அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான்.  அதுவே மார்கழி. மாதங்களில் சிறந்தது மார்கழி  என்பார்கள்.

இந்த மாதத்தின் சிறப்புப் பற்றிச்  சொல்ல வேண்டுமென்றால், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம். பகவத் கீதையில்“மாதங்களில் நான் மார்கழி” என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம். தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம் திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம். மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான் அவதரித்த மாதம். ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம். வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம். கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும் மாதம். ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம். இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி. அப்படிப்பட்ட மார்கழி மாதமும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையும் இணைவதே மார்கழி இசை விழா. அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.
“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான  தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே. எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார்.  இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்”ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ  ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.
எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில்
உள்ளவர்கள் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனr.
எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் எமது நிறுவனத்தின் சார்பாக உங்கள் பேராதரவுடன் ”சென்னையில்-திருவையாறு” என்ற வடிவத்தில் பனிரெண்டாவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.
மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும்  நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.
பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”
”சென்னையில் திருவையாறு” துவக்க நாளான 18 டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மர்றும் தியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் கான்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது. கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி”அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்துக் கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம் விழா துவங்கும் முன் வழங்கப்படும். இந்நிகழ்விற்குப் பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம். இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம் அனைவரும் வருக.
”சென்னையில் திருவையாறு” துவக்க விழா
சரியாக மாலை 3.30 மணிக்கு ”சென்னையில் திருவையாறு”சங்கீத வைபவத்தின் துவக்க விழாவினை மூத்த இசைக் கலைஞரும், கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி இசை இரண்டிலும் ஞானவளம் பெற்றவரும், ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மாநில மொழிகளிலும் பாடியவரும், எல்லா மாநில மக்களையும் தனது சங்கீதக்கச்சேரிகள் மூலம் சந்தித்து சந்தோஷத்தை அளித்தவரும், தமிழ்ப்புலமையில் வல்லவரும், சிறந்த பேச்சாளரும், அற்புதமான ஓவியரும், தனது தெய்வீகக்குரலால் உலகமெங்கும் பன்மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவருமான ”ஏழிசை அரசி திருமதி வாணி ஜெய்ராம்” அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றார்.
இசை ஆழ்வார் விருது
துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ”சென்னையில் திருவையாறு” அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த கலைஞர் ஒருவருக்கு அவரது இசைச்சேவை மற்றும் வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக ”இசைஆழ்வார்” என்ற கெளரவ விருதும், தங்கப்பதக்கமும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
அவ்வழியில் இவ்வாண்டு விழாவில் கர்நாடக இசையை மிகத்துல்லியமாய் வழங்கக்கூடியதும், உலக அளவில் எல்லா நாட்டவரும் தமது இசையோடு இணைத்துக் கொள்ளக்கூடிய நுட்பமானதொரு கருவியுமான  “வயலின்”  இசை மூலம் சாதனைகள் பல செய்தவரும், சர்வதேச கலைஞர்கள் பலருடன் பணியாற்றி, இன்றளவும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகவும், ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை தன் இசையால் ஏற்படுத்தி வைத்திருப்பவருமான ”வயலின் மேஸ்ட்ரோ  எல்.சுப்ரமணியம்” அவர்களின் வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும் முகமாக ”இசை ஆழ்வார்” பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்யப்படவுள்ளது.
துவக்க விழாவினைத் தொடர்ந்து  மாலை 4.45 மணிக்கு திரு.எல்.சுப்ரமணியம் அவர்களின் சிறப்பு வயலின் இசை நிகழ்ச்சியோடு ”சென்னையில் திருவையாறு” இசை நிகழ்வுகள் துவங்குகின்றன.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு  நாட்டியத்தாரகை “ஷோபனா” அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் முதல்நாள் நிறைவு பெறும்.
சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழா அட்டவனை

18 டிசம்பர் 2016 – ஞாயிற்றுக்கிழமை    
காலை 11.00 மணி    நாதஸ்வரம் – திருபாம்பரம் டி.எஸ்.எச்.இராமநாதன்
மதியம் 2.00 மணி    பஞ்சரத்னகீர்த்தனைகள் – பி.எஸ்.நாராயணசாமி
பிற்பகல் 3.30 மணி    “சென்னையில் திருவையாறு” விழாவினை ஏழிசை அரசி திருமதி.வாணி ஜெய்ராம் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.  “பாரத ரத்னா” எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் “பாரத ரத்னா” எம்.ஜி.ஆர் இருவரது சிலைகளையும் “இயக்குநர் இமயம்”  திரு.பாரதிராஜா” திறந்து வைக்கிறார்.
மாலை 4.45 மணி    வயலின் – எல். சுப்ரமணியம்
இரவு 7.30 மணி    பரதநாட்டியம் – ஷோபனா
19  டிசம்பர் 2016 – திங்கள்கிழமை    
காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – டாக்டர் பால கோவிந்த தாஸ்
காலை 8.30 மணி    பரதநாட்டியம் –  சுபிக்‌ஷா கணேஷ்
காலை  9.45 மணி    பரதநாட்டியம் – சுபவந்தனா சந்திரமோகன்
காலை  11.30 மணி    பரதநாட்டியம் – நர்த்தகி நடராஜன்
மதியம் 1.00 மணி    வாய்ப்பாட்டு – எஸ்.ஐஸ்வர்யா
மதியம் 2.45 மணி    நடனம் –  மேரே ஷ்யாம் –  ”கண்ணன் என் காதலன்”
மாலை  4.45 மணி    வாய்ப்பாட்டு – அபிஷேக் ரகுராம்
இரவு  7.30 மணி    வீணை – ராஜேஷ் வைத்யா,  புருபையன் சட்டர்ஜி

20 டிசம்பர் – செவ்வாய்க்கிழமை  
காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – உடையாளூர் கல்யாணராமன்
காலை 8.30 மணி    பரதநாட்டியம் – அம்ரிதா
காலை  9.45 மணி    பரதநாட்டியம் – மீனாட்சி ஆனந்த்
காலை  11.30 மணி    வாய்ப்பாட்டு – சவிதா ஸ்ரீராம், சுசித்ரா, வசுதா ரவி (சந்த் பிரவாஹம்)
மதியம் 1.00 மணி    வாய்ப்பாட்டு – மாளவிகா
மதியம் 2.45 மணி    வாய்ப்பாட்டு – பாபநாசம் அஷோக் ரமணி
மாலை  4.45 மணி    வாய்ப்பாட்டு – மஹதி
இரவு  7.30 மணி    வாய்ப்பாட்டு –  உன்னிகிருஷ்ணன்

21 டிசம்பர் 2016 – புதன்கிழமை    
காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – தாமல் ராமகிருஷ்ணன்
காலை 8.30 மணி    பரதநாட்டியம் – தேஜஸ்வினி
காலை  9.45 மணி    பரதநாட்டியம் – திக்‌ஷா கிஷோர்
காலை  11.30 மணி     வாய்ப்பாட்டு –  அனாஹிதா, அபூர்வா, கீர்த்தனா  (கீர்த்தனம் சங்கீர்த்தனம்)
மதியம் 1.00 மணி    வாய்ப்பாட்டு – டி.கே.ராமச்சந்திரன்
மதியம் 2.45 மணி    பக்தி பிரயாணம் – உமையாள்புரம் கே.சிவராமன்
மாலை  4.45 மணி    நாட்டிய நாடகம் – மதுரை ஆர்.முரளிதரன் (யாதவா – மாதவா )
இரவு  7.30 மணி    வாய்ப்பாட்டு – நித்யஸ்ரீ மகாதேவன்

22 டிசம்பர் 2016 – வியாழன்கிழமை    
காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – ஒ.எஸ்.சுந்தர்
காலை 8.30 மணி    வாய்ப்பாட்டு – ராம்நாத் வெங்கட்பகத்
காலை  9.45 மணி    வாய்ப்பாட்டு – பி.வி.பரமேஸ்வரன்
காலை  11.30 மணி    வாய்ப்பாட்டு –  படித்துறை பாடல்கள்
மதியம் 1.00 மணி    பரதநாட்டியம் – சுபத்ரா மாரிமுத்து
மதியம் 2.45 மணி    வீணை – ரேவதி கிருஷ்ணா
மாலை  4.45 மணி    வாய்ப்பாட்டு –  சிக்கில்குருசரண்
இரவு  7.30 மணி    கிட்டார் – பிரசன்னா
23 டிசம்பர் 2016 – வெள்ளிக்கிழமை    
காலை 7.00 மணி    சொற்பொழிவு – தேச மங்கையர்க்கரசி
காலை 8.30 மணி    பரதநாட்டியம் – பிரதிஷ்டா ஞானரத்னசிங்கம்
காலை  9.45 மணி    வாய்ப்பாட்டு – கிருதி பட்
காலை  11.30 மணி    வாய்ப்பாட்டு – நிஷா ராஜகோபால், அமிர்தா முரளி, விக்னேஷ் ஈஸ்வர்
மதியம் 1.00 மணி    பரதநாட்டியம் – மயூரி அகாடமி
மதியம் 2.45 மணி    வயலின் – லலிதா &  நந்தினி
மாலை  4.45 மணி    பரதநாட்டியம் – ஊர்மிளா சத்யநாராயணன்
இரவு  7.30 மணி    வாய்ப்பாட்டு – சித் ஸ்ரீராம்

24 டிசம்பர் 2016 – சனிக்கிழமை    
காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – துக்காராம் கணபதி
காலை 8.30 மணி    இந்துஸ்தானி – இடா பாலகிருஷ்ணன்
காலை  9.45 மணி    பரதநாட்டியம் – மீனாட்சி ராகவன்
காலை  11.30 மணி    வாய்ப்பாட்டு – ஷோபனா விக்னேஷ்
மதியம் 1.00 மணி    பரதநாட்டியம் – வினிஷா கதிரவன்
மதியம் 2.45 மணி    வாய்ப்பாட்டு – கர்நாட்டிகா பிரத்ர்ஸ் &  துஷ்யந்த் ஸ்ரீதர்
மாலை  4.45 மணி    வாய்ப்பாட்டு – எஸ்.செளம்யா
இரவு  7.30 மணி    வாய்ப்பாட்டு – சுதா ரகுநாதன்
25 டிசம்பர் 2016 – ஞாயிற்றுக்கிழமை 

காலை 7.00 மணி    நாமசங்கீர்த்தனம் – கடலூர் கோபி
காலை 8.30 மணி    நாமசங்கீர்த்தனம் – நவகான பஜனை மண்டலி
காலை  9.45 மணி    பரதநாட்டியம் – விதிஷா
காலை  11.30 மணி    வாய்ப்பாட்டு – ஹரிசரண்
மதியம் 1.00 மணி    வாய்ப்பாட்டு – டாக்டர். கணேஷ்
மதியம் 2.45 மணி    வாய்ப்பாட்டு – ஷோபா சந்திரசேகர்
மாலை  4.45 மணி    வாய்ப்பாட்டு – அருணா சாய்ராம்
இரவு  7.30 மணி    வாய்ப்பாட்டு – கார்த்திக்

19ஆம் தேதி முதல் தினமும் எட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்குத் துவங்கி,  இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக்கலைஞர்களும், வளர்ந்து வரும் திறமையாளர்களும், நாட்டியக் கலைஞர்களும் சேர்ந்து மொத்தம் அறுபது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மேலே உள்ள பட்டியலில் காணப்படும் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு விதமான வகையில் இவ்விழாவிற்காக மிக நுணுக்கமான வகையில் பயிற்சியும் முயற்சியும் செய்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான முறையில் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை, பாடுவோர்க்கும், இசைப்போர்க்கும், நடனமாடுவோர்க்கும், நிகழ்ச்சியைக் காண்போர்க்கும் சந்தோஷமளிக்கும் வகையில் இருக்கும்.
அரங்கத்தின் எல்லா இடங்களிலும் சீராகக் கேட்கும் படியான செவிக்கினிய ஒலி அமைப்பும், கண்கவர் ஒளி அமைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அரங்கின் எல்லா பகுதிகளிலிருந்தும் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் நடனக்கலைஞர்களையும் அவர்களது திறமைகளை துல்லியமாகக் காணும் வகையில் மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் அமைக்கப்படுகின்றன.
லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் கண்டுகளிக்கும் ”சென்னையில் திருவையாறு” இசை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ”ஜீ தமிழ்”  தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
டிக்கெட் விற்பனை
அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச்சீட்டும் (Season Ticket),  தனித்தனியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான தனியாக ஒரு அனுமதிச்சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் காமராஜர் அரங்கம் – தேனாம்பேட்டை, லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி,  எம் 6  ஈவண்ட்ஸ் –  சி.ஐ.டி நகர், நந்தி சிலை எதிரில், நாயுடு ஹால் கிளைகள் – அண்ணா நகர், தி நகர், புரசைவாக்கம்,  ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இணையதளம் மூலமாக (Online Ticket Booking)  கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது www.lakshmansruthi.com, www.bookmyshow.com, www.vikatan.com www.raaga.com, www.pramaarts.com
மேலும் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள:
044-44412345, 86676 87066, 86675 88530, 9941922322, 9841907711
www.chennaiyilthiruvaiyaru.com <http://www.chennaiyilthiruvaiyaru.com>, , email : ct@lakshmansruthi.com
https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial
http://www.lakshmansruthi.com/Food-Festival/index.asp

இலவச நிகழ்ச்சிகள்
தினமும் காலை 7.00 மணி, 8.30 மணி, 9.45 மணி, 11.00 மணி, பிற்பகல் 1.00 மணி, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.45 மணி, இரவு 7.30 ஆகிய காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உண்டு.
ரசிகர்களுக்கான இலவச இரவுப்பேருந்து
ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.30 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல  வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இலவசமாக பேருந்துகள் (Free Buses) இயக்கப்படும். இலவச பேருந்தில் செல்ல விரும்புவோர் தங்கள் பெயரையும், செல்ல வேண்டிய இடத்தையும், உடன் வருவோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு 98412 98512, 98412 99966 ஆகிய எண்களில் ஒன்றிற்கு எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் (Whatsapp) செய்து தங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம். உதவி : ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & டிராவல்ஸ். மேலும் விவரங்களுக்கு 044 – 4666 4666  www.sblt.co.in <http://www.sblt.co.in>

வாகனங்கள் நிறுத்தும் வசதி

ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விற்பனை அரங்குகள்
நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி க்கள், சி.டி க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக்கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

எம்.எஸ்.சுப்புலட்சுமி & எம்.ஜி.ஆர்  திருவுருவ மெழுகுச்சிலை
“மக்கள் திலகம் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர்” அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் “இசையரசி பாரத ரத்னா திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி” அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச் சிலைகள் “லண்டன் வேக்ஸ் மியுசிய”த்தில் உள்ளது போல் “சென்னையில் திருவையாறு” விழா நடைபெறும் காமராஜர் அரங்க நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.
இத்திருவுருவச் சிலைகளுடன் பொதுமக்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வசதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  இவ்வருடம் “பாரத ரத்னா” எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் “பாரத ரத்னா” எம்.ஜி.ஆர் இருவரது சிலையை “இயக்குநர் இமயம்” பாரதிராஜா” திறந்து வைக்கிறார்.
மக்கள் திலகத்தின் சிலை அமைப்புக்கான உதவியை சென்னை, பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழக”த்தின் நிறுவனரும் வேந்தருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் வழங்கியுள்ளார்.எம்.எஸ்ஸின் சிலை அமைப்புக்கான உதவியை “சுஸ்வரலஷ்மி ஃபவுண்டேஷன்” வழங்கியுள்ளது.
உலகெங்குமிருந்து வருகை தரும் இசையுலக ரசிகர்களுக்கும், மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கும் இச்செய்தி நிச்சயம் சந்தோஷத்தையும், புத்துணர்வையும் நிச்சயம் அளிக்கும்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்டுவருகிறது.
தன் படங்களின் பாடல்கள் நன்றாக வரமேண்டுமென பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என்று அனைவருடனும் ஆலோசனைகள் செய்து, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு, சக நடிக நடிகையரின் முழு ஈடுபாட்டையும் வரவழைத்து, தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, தன் சிந்தனைகளையும் கலந்து தீர்க்கதரிசனத்தோடு உழைத்தவர் எம்.ஜி.ஆர்.
பாடல்களுக்காகவும் அதன் தரமான இசைக்காகவும் உலகில் வேறு ஒரு திரைப்பட நடிகர் இந்த அளவுக்கு அக்கறை செலுத்தி பணியாற்றியிருப்பார்களா என்று ஆராய்ந்து பார்த்தால், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு மட்டுமே அடையாளம் காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால்தான் அவர் நடித்த பாடல்கள் இன்றும் உயிர்ப்போடும், இளமையோடும், துள்ளலோடும், கருத்துக்களோடும் காற்றலைகளில் கலந்து ஒலித்து நம்மை மகிழ்வித்து வருகின்றன.
அவர் நடித்த படங்களில் 1200 பாடல்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இன்றும் பிரபலமாகவும், மக்களின் உதடுகளால் முணுமுணுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம், நம்இதயம் என்றில்லாமல், எல்லா தொழில்நுட்ப வளர்ச்சிகளால் கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்குள்ளும் புகுந்து வந்து கொண்டிருக்கின்றன எம்.ஜி.ஆர்.பாடல்கள்.
இத்தனை இசை சாதனையும், இசையுலகிற்கான சேவையும் செய்த மக்கள் திலகத்தை கெளரவம் செய்யும் வகையில் “சென்னையில் திருவையாறு” இசை விழாவில் சிலை அமைக்கப்படுகிறது.
அதே போல கர்னாடக இசையில் ஈடு இணையற்ற சாதனையாளராக இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை தனது தேனினும் இனிய குரலால் மயக்கியவரும், ஐக்கிய நாடுகள் சபையிலும் தனது குரலை ஒலிக்கச் செய்து நமது தேசத்துக்கு பெருமை சேர்த்தவருமான பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது மெழுகுச் சிலையையும் விழா அரங்கில் அமைக்கப்படுகிறது.

வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, கர்னாடக இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாகவே போற்றி வணங்கும் எம்.எஸ் அவர்களின் திருவுருவச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இந்த அரிய வாய்ப்பை வழங்குவதில் லஷ்மன் ஸ்ருதி பெருமையடைகிறது.
உலகத் தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச் சிலைகள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளன.
அறிவுத்திறன் போட்டி மூலம் ரசிகர்களுக்குக் குவியும் பரிசுகள்:
அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத்திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும்  பெட்டிகளில் சேர்க்க வேண்டும்.
மேடை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞரின் கரங்களால் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களில் ஐந்து பேரை குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். அதுவும் குறிப்பிட்ட அந்தக் கலைஞரே ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது சிறப்பம்சமாகும்.
ரசிகர்களை அதிசயிக்க வைக்கும் பம்பர் மற்றும் மெகா பரிசுகள்:
நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, எட்டு நாட்களிலும் கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ”அமெரிக்கா” சென்று வருவதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள் கும்பகோணம் ”அரசு ஜுவல்ஸ்” நிறுவனத்தின் சார்பாக பம்பர் பரிசாக வழங்கப்படும்.
உணவுத்திருவிழா: 2016
”சென்னையில் திருவையாறு”  இசை விழாவுடன்   உணவுத்திருவிழா எப்படி இணைந்தது ?
”செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பர்.
”சென்னையில் திருவையாறு” இசை விழாவில், ரசிகர்களின் செவிகளை திகட்டத் திகட்ட நிரப்பும் தேனினும் இனிய இசை விருந்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும்  இடைவிடா இசை மழைக்கு இடையே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி, சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து, கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் கண்டுபிடித்து சாப்பிட்டுத் திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும்.

ரசிகர்களின் செவிக்கு பல்வேறு இசை வடிவங்கள் கேட்கக் கிடைப்பது போல், வயிற்றுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைத்தால் ஏராளமான ரசிகர்கள் விழாவுக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் உணவுத்திருவிழாவினை வடிவமைத்தோம். மற்றும் குறிப்பாக, வெளிநாட்டு ரசிகர்களிடையே இந்த உணவுத்திருவிழா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

முப்பதுஅடி உயர  ”மாயா பஜார்” கடோத்கஜனின் பிரம்மாண்டமான சிலை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதமாக 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ”மாயாபஜார்” திரைப்படத்தில் ”கல்யாண சமையல் சாதம்” பாடலில் ”கடோத்கஜன்” வேடமிட்டு திரு.ரங்காராவ் அவர்கள் நடித்த காட்சி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும். அந்த புகழ்பெற்ற ”கடோத்கஜன்” உருவத்தை பிரம்மாண்டமாக முப்பது அடியில் உணவுத்திருவிழாவில் அமைக்க உள்ளோம். இதில் ”கடோத்கஜன்” அருகில் சென்று விளையாடவும், புகைப்படமெடுக்கவும், நம் குழந்தைகளும், குழந்தை உள்ளம் கொண்டவர்களும் நிச்சயம் விரும்புவார்கள். மிக சுவாரஸ்யமான அனுபவமாக அனைவர்க்கும் அமையுமென்று நம்புகிறோம்.

உணவுத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாடித்தோட்டம் வடிவமைத்தல், பராமரித்தல், உபகரணங்கள், விதை, உரம் மற்றும் அனைத்து விவரங்களையும் இத்துறையில் சிறந்த வல்லுநர்கள் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளார்கள். மூலிகை செடிகள் வளர்ப்பதற்கான சிறப்பு விளக்கங்களும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முப்பதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.

பசியாற்றும் உணவகங்கள் மட்டுமே என்றில்லாமல், உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், பார்வையாளர்களும் பங்கேற்று தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகள், ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், நாள் முழுக்க நடக்கும் உணவுத் திருவிழாவின் இடையே மேடைக்கும் உணவரங்கங்களுக்கும் வந்து செல்லும் இசையுலக ஜாம்பவான்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள், ஆகியோர் அனைவரையும் அருகில் கண்டு பேசி மகிழும் வாய்ப்பு, சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள்  இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன.

அதேபோல் உணவுத்திருவிழாவினை மட்டுமே காண வருவோர் காமராஜர் அரங்கத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றதென்று எட்டிப் பார்க்கின்ற வேளையில், சங்கீதத்தில் நீந்துகின்ற வாய்ப்பு ஏற்படும்.  கர்நாடக இசையில் ஆர்வமில்லாதோரும் சற்று நேரம் அதைக் கேட்கும் தருணத்தில் தங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பிப்பர். அதுதான் நம் மண்ணின் இசைக்கான மகத்துவம். இசைவிழாவிற்கு புதுப்புது ரசிகர்கள் வரத்துவங்குவர். இதன் மூலம் நமது பாரம்பரிய இசை பல திசைகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டாகும். கடந்த வருடங்களில் இப்படி வருகை தந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை விழாவிற்கு  ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து  வர ஆரம்பித்துவிட்டார்கள்.

முதியவர்களுக்கு முதல் மரியாதை:
இந்த இசை விழாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக, முதியவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள்.  அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.

நமது கர்நாடக இசையின்  பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, உலகின் எந்தவொரு இசைக்கும் நமது மண்ணின் சங்கீதம் குறைந்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய உங்களின் பேராதரவை  இவ்விழாவிற்கு நல்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

லஷ்மன் ஸ்ருதி நிறுவனம் – ஒரு சிறு குறிப்பு :
’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு எனும் இந்த நிறுவனத்தை 1987ஆம் ஆண்டு முதல்  30 வது  வருடமாக நடத்தி வருகின்றோம். எங்கள் இசைக்குழு 10000  க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு 36 மணி நேரம் தொடர்ந்து இசை நிகழ்ச்சி என்ற உலக சாதனை  இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினோம்.  தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் 25 நாடுகளுக்கு மேல் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம்.

லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்
எமது குழுவின் சார்பாக 2003 ஆம் ஆண்டு இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்காக ”லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்” என்ற பெயரில் புதிய பாதையில் தடம் பதித்தது. இந்த இசை வளாகத்தில் இசைக்கருவிகள், ஒலி நாடாக்கள், ஆடியோ வீடியோ கேசட்டுகள்,  சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், இசை  சம்பந்தமான புத்தகங்கள், நாட்டிய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இசைக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள பரிசுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் இசை வளாகத்தில்
·    இசை ஒத்திகை அரங்கம் (Rehearsal Hall)
·    இசைப்பள்ளி (Music School)
·    இசைக்கருவிகள் பழுது பார்க்கும் மையம் (Musical Instruments Service)
·    இசைக் குழுக்களின் தேவைக்காகவும்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும், இசை நடனம் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்களுக்காகவும்,  திரைப்படத் துறையினரின் ஒலிப்பதிவு மற்றும் படப்பிடிப்புக்காகவும்  இசைக்கருவிகளை வாடகைக்கு வழங்கும் பிரிவு (Rental Division)
லஷ்மன்ஸ்ருதி.காம் (www.lakshmansruthi.com) என்கிற இணையதளம், இசை ரசிகர்களுக்கான  தகவல்களை வாரி வழங்கும் வகையில் இயங்கி வருகின்றன.

மீடியா சொல்யூஷன்ஸ் – 98422 88715