ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது : பாரதிராஜா!

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது  என இயக்குநர்  பாரதிராஜா கூறியுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது?  எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்கவேண்டிய சூழலிலே  ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.  கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான்இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும்எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய்மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசியகவிஞர் வைரமுத்துவை அநாகரிகமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்றுதமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன்.  அந்தச் செம்மொழியை – மொழிகளில் மூத்த தமிழ்மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம்கொதிக்கவில்லையா?  வாழ்வது தமிழ்மண். சுவாசிப்பது தமிழ்க்காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய்வாழ்த்துக்கு மரியாதை செய்யமாட்டேன் என்று தேசியகீதத்துக்கு மட்டும்தான் மரியாதை செய்வேன்என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா? அறிவார்ந்த தமிழ்க் கூட்டமே, நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீவிழிக்கவில்லையென்றால் உன் உயிரையும் உன் மொழியையும் அழித்து இனத்தையும் அழித்து வாழும்இந்த ஒரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு . எந்தத் தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் . தமிழில் சொல் என்றுபோராடியிருக்கிறானா கோயில்களில். இல்லை. சமஸ்கிருதமொழியைஅவமானப்படுத்தியிருக்கின்றானா ?  இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள்பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு எங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப்படித்ததுமில்லை. பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள்தமிழை நீசபாஷை என்று கூறுகின்றீர்கள். வர்ணாசிரமம்-மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்து மத வாதிகளே … இன்று தமிழ்நாட்டில்தமிழையே தவிர்க்கின்றீர்களா? நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள்உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார்.  நீ எழ மாட்டாயா? தமிழ்நீசபாஷை, சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்? தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்றவரலாறு தமிழ்நாட்டிலே உண்டு . தெரியுமா? தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப்பெற்றுக் கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது. பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப் பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னைஇகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசன் பாடலைப்போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று. ஒற்றுமைப்படு.  …

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது : பாரதிராஜா! Read More

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை  சிறப்பாக கொண்டாடிய வேலம்மாள் பள்ளிக் குழுமம்!

 வேலம்மாள் பள்ளிக் குழுமம் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி நிபுணத்துவம் கொண்டு 1,00,000க்கும் மேற்ப்பட்ட மாணவச் செல்வங்களுடன் கம்பீரமாகச் செயலாற்றி வருகிறது. கடந்த 2018 ஜனவரி 24ம் தேதி சூரப்பேட்டையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பயிலும் ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்ட …

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை  சிறப்பாக கொண்டாடிய வேலம்மாள் பள்ளிக் குழுமம்! Read More

எஸ்.எஸ்.ஆர் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் விநியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து …

எஸ்.எஸ்.ஆர் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’ Read More

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்கள்!

[ngg_images source=”galleries” container_ids=”1100″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்கள்! Read More

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி!

தான் ‘ஸ்கெட்ச் ‘படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் …

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி! Read More

தன் படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்தும் ராணி முகர்ஜி !

ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல …

தன் படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்தும் ராணி முகர்ஜி ! Read More

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’  படக்குழுவினரை ஊக்குவித்த வந்த சிவகார்த்திகேயன்!

  சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படபிடிப்பிற்கு  வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  …

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’  படக்குழுவினரை ஊக்குவித்த வந்த சிவகார்த்திகேயன்! Read More

விஜய்சேதுபதியின் விஸ்வரூபம்!

7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’.  படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக …

விஜய்சேதுபதியின் விஸ்வரூபம்! Read More

100 பாடல்கள் போதும். என் வாழ்வு நிறைவு பெறும் : இசையமைப்பாளர் டி. இமான் பேச்சு !

100 பாடல்கள் போதும், என் வாழ்வு நிறைவு பெறும் என்று இசையமைப்பாளர் டி. இமான் கூறினார். சினிமாவில் 100 வது படம் இசையமைத்த மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் இசையமைப்பாளர் டி. இமான் ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது …

100 பாடல்கள் போதும். என் வாழ்வு நிறைவு பெறும் : இசையமைப்பாளர் டி. இமான் பேச்சு ! Read More

விக்ரம் பிரபு –  நிக்கிகல்ராணி  – பிந்துமாதவி நடிக்கும் ‘ பக்கா’          

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘ பக்கா’                             …

விக்ரம் பிரபு –  நிக்கிகல்ராணி  – பிந்துமாதவி நடிக்கும் ‘ பக்கா’           Read More