சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குநர் தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தைContinue Reading

” அலறல் ” திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா அவர்கள் மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி – தன்யஸ்ரீ மாஸ்டர் – K. சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தைப் பற்றி அறிமுகContinue Reading

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் நூலை இன்று ஷங்கர் வெளியிட்டார். தன் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் பற்றி கபிலன் வைரமுத்து கூறும் போது ”1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டாContinue Reading

   புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவர மனைவி செய்யும் விடாத போராட்டம்தான் கதை. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் கசியும்  கதை இது. கருவேலமரங்கள் சூழ காய்ந்து போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் ரணசிங்கம். . அங்கேContinue Reading

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி? ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன்,  நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம்Continue Reading

‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..! விமல் நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த “படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில்Continue Reading

  தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு  இயக்குநர்களான  கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன்  ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக  வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள். நெட்ஃப்ளிக்ஸ்  ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான  “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறிவித்துள்ளார்கள். கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன்  ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாவ கதைகள்  காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை  ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம்  தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்  படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் கூறியது… “பாவ கதைகள்” படம் இயக்குநர்கள் வெற்றி மாறன்,   சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன்  ஆகியோருடன் பணிபுரியும் எனது முதல் அனுபவம். கனமிக்க, மிகவும் சிக்கலான  கருவை, மிகவும் நேர்மையுடன் வெளிப்படையாக இந்த பெரும் இயக்குநர்களுடன் இணைந்து கையாண்டு கதை சொன்ன இந்த அனுபவம் வெகு அற்புதமாக இருந்தது. இந்த ஆந்தலாஜி திரைப்படம் நாம் கொண்டிருக்கும் அந்தஸ்து, கௌரவம், சமூக கட்டமைப்புகள் தனிமனித சுதந்திரத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை கட்டுடைத்து காட்டுவதாக இருக்கும் என்றார். படம் குறித்து சுதா கொங்குரா கூறியது… இப்படத்தில் உள்ள ஒவ்வோரு கதைகளும் எந்த தடைகளும் இல்லாமல் நம் சினிமா வழக்கத்திற்கு மாறான கட்டுக்கடங்காத அன்பை கூறும் கதைகளாகும். மிக உயர்ந்த தரத்திலான இந்த படைப்பு இந்தியாவையும் கடந்து உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வழியே சென்றடைவது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்றார். படம் குறித்து வெற்றி மாறன்  கூறியது… Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கதை சொல்வதில் மட்டுமே எனது கவனம் இருந்தது. நான் நினைத்ததை எந்த தடங்கலும் இல்லாமல் சொல்ல முடிந்தது. படம் உருவாக்குவதில் “பாவ கதைகள்” திரைப்படத்தில் முழு சுதந்திரத்தை அனுபவைத்தேன். இப்படம் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார். படம் குறித்து விக்னேஷ் சிவன்   கூறியது… Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன படைப்புகளின் தீவிர ரசிகன் நான். ஒரு படைப்பாளனாக மாறுபட்ட கதையினை, முழுதாக அங்கீகரிக்கும் மூன்று பெரும் இயக்குநருடன் இணைந்து கூறும் வாய்ப்பு மிகப்பெரிய பரிசாகும். இக்கதைகள் நம் தமிழ் சமூகத்தில் உறவுகளின் வேதனையளிக்கும் இருண்மை மிக்க  பக்கத்தினை நாம் உணரும்படி வெளிச்சமிட்டு காட்டும் என்றார். Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 193 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரரகள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரரகள் படததை  நிறுத்தி, ஃபார்வெட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். RSVP Movies RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்  என்பது நாம் இங்கு சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர்கள் இணையவெளியில் தாங்கள்  பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த  வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளை தொடர்ந்து புதிதாக,  வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிகொண்டே இருக்கவேண்டும் என்பதாகும்.  இந்நோக்கத்தில் செயல்படும் RSVP Movies நிறுவனம் Love  Per Square Foot, Lust Stories, Karwaan, Pihu, Kedarnath, URI – The Surgical Strike, Sonchiriya , Raat akeli hain , the skyContinue Reading

ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படம் இன்றளவிலும் ரசிக்கப்படுகிறது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கியஇயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை  இயக்கவுள்ளார்.தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீரடி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மைக்Continue Reading