ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் ‘டிக்டாக்’. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். ‘எங்கிட்ட மோதாதே’ படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில்Continue Reading

‘வேலன்டைன்ஸ் டே’ என்றாலே டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது என இன்றைய தலைமுறை ஒரு மோசமான ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனாலேயே காதலர் தினத்தை வெறுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அவர் காதலிப்பது ஆதரவற்ற குழந்தைகளை என்பது ஹைலைட்! ஆம், காதலர் தினத்தையொட்டி ஆதரவற்ற குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சாக்ஷி. தான் நடித்த ‘குட்டி ஸ்டோரி’ படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் நேரமாகப் பார்த்து காதலர் தினம் வருகிறது. அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார். அவரிடம் பேசினோம்… ” ‘வேலன்டைன்ஸ் டே’வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன்.  மூணு வருஷத்துக்கு முன்னே, ‘ஃபுட் ஃபார் டூ’ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது ‘ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது’ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது.  போன வருஷ காதலர் தினத்தை, ‘எய்ட்ஸ்’ பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். ‘எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு’ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன். இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற ‘நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்’ காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி… இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்” என்றார். ‘குட்டி ஸ்டோரி’ படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘டெடி’ படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘தி நைட்.’ விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். ‘அரண்மனை 3’யிலும் நடிக்கவிருக்கிறார் என்பது சாக்ஷி பற்றிய அடுத்த அப்டேட்.Continue Reading

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்கள் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா மேன் ஆகிவிட்டார்கள். அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, எல்லோருடைய கையிலும்Continue Reading

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’காடும்  காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம்  சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சிContinue Reading

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்தContinue Reading

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி திரைப்படம் LIGER ( saala Crossbreed ) செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது. ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்குரிய  திரைப்படமாக உருவாகிவருகிறது. Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. liger படத்தின்Continue Reading

ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம். மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போதுContinue Reading