பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.இந்தப் படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார்.திரைப்படக்கல்லூரி மாணவரான இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, போன்ற பல வெற்றி படங்களைத் தந்தவர்.மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார்.Continue Reading

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரித்துள்ளார். கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .Continue Reading

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார். சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார்.Continue Reading

இயக்குநர் பாலாவும் -சூர்யாவும் கூட்டணியாக நந்தா ,பிதாமகன் படங்களுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். இதுபற்றி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பதாவது: “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர்Continue Reading

ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு? என்ற கேள்வியுடன், விடைகாண தயாராகும் ‘ஓங்காரம்’! நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம். ‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காகபுரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும்,Continue Reading

இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள் ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை பண்டிகை கால மனோபாவத்துக்குContinue Reading

இயக்குநர் டோனிசான் இயக்கத்தில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள படம் கொடியன். கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே , மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது. நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டுவருகிறது. கொடியன் படமும் மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றிபேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுயுள்ளContinue Reading

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சினைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டுப் பாராட்டுக்களைப் பெற்றது.Continue Reading

அண்மையில் தனது ‘ஒத்த செருப்பு’ படத்திற்காகத் தேசிய விருது பெற்றுக் கொண்டு சென்னை திரும்பியுள்ள பார்த்திபன்,பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து உண்மையும் நெகிழ்ச்சியும் கலந்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ’பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் !இந்த நண்பர்களுக்கு என்று சொல்வதில் ஒரு ஸ்பெஷல் அர்த்தம் இருக்கிறது, வெறும் பத்திரிகையாளர்களாக, ஊடகவியலாளர்களாக இல்லாமல், எப்போதும் எனக்கு நண்பர்களாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.’ உடுக்கை இழந்தவன் கை போல்Continue Reading