உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இது ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் மறு உருவாக்கம். ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பார்ப்பை இப் படம் பூர்த்தி செய்ததா? கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணவில்லை.அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டிஎஸ்பி அதிகாரி உதயநிதி ஐபிஎஸ்Continue Reading

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள “Love you baby” ஆல்பம் சாங். விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லிரிக்ஸ் என புதுவிதமாக.. Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார். இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் பிடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இப்பாடலின் வெற்றியைContinue Reading

இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும் உடையை மாற்றிகொண்டு முகூர்தத்திற்கு ரெடியானார்கள். இரவு 1.30 மணியளவில் மணமகன் ஆதி, மணமகள் நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார்.முகூர்தத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் . வரவேற்பு நிகழ்ச்சியில்Continue Reading

தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கக் கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார். தற்போது, அவர்Continue Reading

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை வந்தடைந்து விட்டது. ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படத்திற்கான முன்பதிவு, இந்தியாவின் சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது. ! ரசிகர்கள் உற்சாகத்தைக் கூட்டவும், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்கவும் வந்து விட்டது, ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன். ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதிப் பாகமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.Continue Reading

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் பிரமாண்டமான இசை , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரை பிரபலங்கள் நிறைந்த நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் “விக்ரம் “ திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகின்றனர். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டை நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மிகப்பெரும் விருந்தாக எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இந்த விழா தமிழ் திரையுலகிலிருந்துContinue Reading

பெற்றோர் தங்கள் கனவைப் பிள்ளைகள் மீது திணிப்பது சகஜம்.அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்படுகிறார். ஆனால், மகன் சிவகார்த்திகேயனுக்கு அதில் துளிக்கூட விருப்பம் இல்லை. மகனை என்ஜினியரிங் கல்லூரியில் கட்டாயப்படுத்திக் கொண்டுபோய் சேர்க்க, அங்கே படிக்காமல் மாணவர்கள் மத்தியில் ‘டான்’ ஆகிறார். கல்லூரியின் நன்னடத்தைக் கட்டுப்பாட்டுக் கமிட்டியின் தலைவராக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பனிப்போர் ஏற்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் என்ன மாதிரியான பிரச்சினைகளைச் சந்திக்கிறார், என்ஜினியராகிContinue Reading

ஜி.வி .பிரகாஷை இதுவரை தீராத விளையாட்டுப் பிள்ளையாக ப்ளேபாய் போன்று பல படங்களில் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட வேடங்களில் பார்த்து வந்த அவர் ஐங்கரன் படத்தின் மூலம் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க சாதனத்தைக் கண்டுபிடிக்கும் பட்டதாரி இளைஞர் ஜி.வி .பிரகாஷ். அவரைச் சுற்றிக் கதைச் சம்பவங்கள் நடக்கின்றன. சமூகத்தில் நிகழும் பிரச்சினையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .நகைக் கடைகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், பட்டதாரிContinue Reading