25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் முக்தா சீனிவாசன் !

muktha1சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன்.

அவர் திரைப்பட துறைக்கு வந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். 25 ஆண்டுகளாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார்.

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்கையைத் தழுவி “ மனித நேயர் ராமானுஜர் “ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறார்.படம் பற்றி அவர் கூறியதாவது

”பிரபல நடிகர்கள் திரையில் கதாப்பாத்திரமாக பதிய மாட்டார்கள். அவர்களது இமேஜ் அந்த கதாப்பாத்திரத்தை மழுங்கடித்து விடும். அதனால்தான் ராமானுஜராக புதுமுகத்தை நடிக்க வைக்க உள்ளேன்.

பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப் பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆள் ராமானுஜர்தான். இது எனது 45 படம்.

மார்ச் மாதம் படப்பிடிப்பை துவக்கி மூன்றே மாதத்தில் திரையிட உள்ளோம்.

ஸ்ரீ பெரும்புதூர், கல்யாணபுரம், கோவிலடி, திருக்கோவிலூர், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ஸ்ரீ ராமானுஜர் அவரது வாழ்கையை திரையில் பதிவிடுவதில் எனக்கு பெருமையே ”என்றார் முக்தா.வி.சீனிவாசன.

முக்தா.வி.சீனிவாசன் இதுவரை இயக்கிய, தயாரித்த படங்கள்…

முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக்குளம், ஓடிவிளையாடு பாபா, மகனே கேள், ஸ்ரீ ராமஜெயம், சினிமா பைத்தியம், பனித்திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், தேன்மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், ஆயிரம்பொய், நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், சூரியகாந்தி, அன்பைத்தேடி, அந்தரங்கம், பேரும் புகழும், அந்தமான் காதலி, இமயம், அவன் அவள் அது, பொல்லாதவன், கீழ் வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், பரீட்சைக்கு நேரமாச்சு, சிவப்பு சூரியன்,   தம்பதிகள், இரு மேதைகள், ஒரு மலரின் பயணம், கோடைமழை, நாயகன் ( தயாரிப்பு மட்டும் ), கதாநாயகன், சின்ன சின்ன ஆசைகள், எதிர்காற்று, பிரம்மசாரி, ராஜபாண்டி, வாய்க்கொழுப்பு, கண்களின் வார்த்தைகள், பாஞ்சாலி, பலப் பரீட்சை போன்ற படங்கள்.