4 கதைகளுடன் மோகன்லால் – கவுதமி நடிக்கும்’ நமது ‘ஆகஸ்ட் 5 -ல் ரிலீஸ்!

mohanlalமோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘ நமது’ படம்  தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் இந்த மூன்று மொழிகளிலும் ஒரே தேதியில் ஆகஸ்ட் 5 இல் ரிலீஸ் ஆகிறது.

மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “ மனமன்தா “ என்றும் தமிழில் “ நமது “ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் பேசப் படுவதுண்டு.

மற்றும் விஸ்வநாத்  – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.

மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.

ஒளிப்பதிவு   –  ராகுல் ஸ்ரீவத்சவ்

இசை   –  மகேஷ் சங்கர்

தயாரிப்பு   –  ரஜினி கோரப்பட்டி

எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்.

gowtamiபடம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்.

ஒரு உலகம்-நான்கு கதை என்கிற தத்துவத்தை இதில் கையாள்கிறோம். சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேலாளராக வேலை செய்யும் மோகன்லால்

குடும்பத் தலைவியாக கவுதமி

11 வயது சிறுமியாக ரெய்னாராவ்

24 வயது வாலிபனாக விஷ்வாந்த்

இப்படி நால்வரைப்பற்றிய நான்கு கதைகள். இந்த நால்வரும் தனித்தனி      கதாபாத்திரங்கள் – யாரும் யாருக்கும் அறிமுகமோ – உறவு முறையோ இல்லை.

நான்கு பேரின் கதைகளும் ஓன்று சேரும் இடம் தான் படத்தின் கிளைமாக்ஸாக இருக்கும்.

அருமையான குடும்பக் கதையாக ‘நமது’ உருவாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது என்றார் இயக்குநர்.