50 -மும்பை நடன அழகிகளுடன்  கேப்மாரி பாடல் காட்சி!

50 -மும்பை நடன அழகிகளுடன்  C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி!

எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.  

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார்,சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

 என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

 என்ற ஹரிசரண்  பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

 

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது. கதாநாயகன் .

ஜெய்,   கதாநாயகிகள் – அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா   .