9-வது சர்வதேச குறும்பட விழா தொடங்கியது!

shortfilm-fest159-வது சர்வதேச குறும்பட விழா மார்ச் 25-ம் நாளன்று மிகவிமர்சையாக சென்னை, புரசைவாக்கம், அபிராமி மெகா மால், ஸ்ரீ அன்னை திரையரங்கில் காலை 10.30 மணிக்கு சிறப்பு விருந்தினர்களின் குத்துவிளக்கேற்றும் நிகழ்வோடு ஆரம்பமானது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திரைத்துறை பிரமுகர்களான இயக்குனர் ராம் பிரகாஷ் , இயக்குநர் எழுத்தாளார் ஈ. ராம்தாஸ் , திரைவிமர்சகர் எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், இயக்குநர் ஸ்டான்லி  ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் , ஒளிப்பதிவாளர் தீபக் குமரபதி கலந்து கொண்டு விழாவை சிறப்புறச் செய்தனர்.

மேலும்  தொன்போஸ்கோ சமூக ஊடக கல்வி மையத்தின்  இயக்குநர் அருட்தந்தை ஹாரிஷ் மற்றும் தொன்போஸ்கோ நிர்வாக துணைத்தலைவர் அருட்தந்தை. தேவா ஜோ அவர்களும் இணைந்து சிறப்பிக்க விழா இனிதே துவங்கியது.
மேலும் திரைப்பட கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள், திரைக்கல்லூரி பல்கலைக்கழகங்கள் என பலரும் கலந்து கொள்ள. சிறப்புவிருந்தினர்கள் அனைவாpன் கரங்களாலும் 2015-ம் ஆண்டிற்கான சா;வதேச குறும்பட விழாவின் சிறப்பு தொகுப்பு வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினா;களின் ஊக்கமளிக்கும் பேச்சுகள் அனைத்து குறும்பட இயக்குனர்களை உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் செயல்பட வைக்கும் வகையில் அமைந்தது. இதோ 9-வது சர்வதேச குறும்பட விழா பற்றிய சிறப்பு விருந்தினர்கள் கருத்துகள் உங்களின் பார்வைக்கு.

தொன்போஸ்கோவின் நிறுவனத்தின் துணைத்தலைவர் அருட்தந்தை தேவா ஜோ அவர்களின் கருத்து அனைவரின் மனதிலும் சிறப்பாக இடம்பெற்றது. குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் புதிய முயற்சியென சமூக பார்வையோடு கதைக்களம் அமைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.
குறும்பட விழாவில் மட்டுமே அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகபார்வையுள்ள கதைக்களம் அமைக்க முடியும். மற்றும் வள்ளித்திரை ஆசையில் சின்னத்திரை குறும்படங்கள் இயக்காமல் தொலைநோக்கு பார்வையோடு அமைய வேண்டும் என்று இயக்குநர் பேரரசு வின் பேச்சு அமைந்தது.

சி.ஜே.ராஜ்குமார் குறும்படங்களில் அதிக ஆங்கிலம் கலக்காமல் தமிழ் எழுத்துக்கும் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும். குறும்படங்களின் கதைக்கள கண்ணோட்டம் மாறுபட்டு காணப்பட வேண்டும் என்றும் தனது எண்ணக் கருத்துகளை கூறினார்.

அதிக அளவில் குறும்படங்களை ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்து ரசித்த நான் முதல்முறையாக மக்களோடு மக்களாக திரையரங்கில் இரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக இயக்குநர் ராம் பிரகாஷ்  கூறினார்.
1150 படங்களின் பதிவுகள் என்னை மிகுந்த ஆச்சாpயத்தில் ஆழ்த்தின. இதுவரை தான் இரண்டு குறும்பட விழாவில் கலந்துள்ளதாகவும். இந்த, சர்வதேச குறும்பட விழா தனக்கு எதிர்பாராத வியப்பை ஏற்படுத்தியதாக ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி  தனது கருத்தை தெரிவித்தார்.

திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்யும் பொழுது அதில் குறிப்பிட்ட கால அளவு இருக்கும். ஆனால் ஒரு சில நிமிடங்களில் மட்டுமே இருக்கும் கதைக்கு படத்தொகுப்பு செய்து அதை இவ்வளவு நேர்த்தியாக வெளியிடும் குறும்படங்களை பார்க்கும் பொழுது தனக்கு பெருமையாக இருக்கிறதென்று, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளார் சாபு ஜோசப்  கூறினார்.

இது எனது குடும்ப விழா தொடர்ந்து பங்குபெறும் விழாவில் நான் சிறப்பு அழைப்பாளன் இல்லை எனது குடும்பம் என்றும் மேலும், இன்றைய இந்திய திரைப்பட உலகம் சாதித்துவிட்டது. அதற்கு சான்றே இன்றைய இயக்குர்களின் வெற்றிப் படங்களில் தொடர்ந்து வரும் திரைப்பட அணிவகுப்பே ஆகும். என்று எழுத்தாளர் இயக்குநர் ஸ்டான்லி பெருமையோடு கூறினார்.

குறும்படத்தை வெறும் படம் என்ற கண்ணோட்டம் என்று பார்க்காமல் விநியோகத்தின் பார்வையிலும் அதை வெளிக்கெணார செய்ய வேண்டும் சர்வதேச அளவில் அனைவரும் கதையம்சமும் கதைக்களமும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்து தனது படங்களுக்கு தானே விமர்சனம் எழுதினால் மேலும் சிறந்த இயக்குநர் என்ற முக்கியத்துவம் கிடைக்கும் என்ற தனது கருத்தை திரைவிமர்சகர்இயக்குநர் கேபிள் சங்கர் கூறினார்.

துவக்க விழாவான அன்று 30 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதனை காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைத்துறை இரசிகர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு. குறும்படங்களை கண்டு மகிழ்சியடைந்தனர்.