90 வயது தடகள வீரர்களை வியக்கும் விஷால் -பார்த்திபன்!

90 வயதிலும் உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் vishaaal வீரர்கள் – ஆச்சரியத்துடன்  வியந்த விஷால் மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் 
 
 
தமிழ்நாடு மாநில மூத்தோர் 35 வது தடகள போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்  கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான மூத்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த மாபெரும் போட்டியில், நடிகர் விஷால் – இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 
“உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கின்றது. ஆனால் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் கதாபாத்திரத்தின் உடல் எடை சற்று கூடுதலாக இருக்கும். எப்படி ‘தங்கல்’ படத்திற்காக அமீர் கான் அவருடைய உடல் எடையை அதிகரித்தாரோ, அதே போல், இந்த படத்திற்காக நானும் என்னுடைய உடல் எடையை அதிகரித்து இருக்கிறேன். 60, 80, 92 என இந்த வயதிலும் தங்களின் உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் தடகள வீரர் வீராங்கனைகளை பார்க்கும் பொழுது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்னுடைய பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று” என்று கூறினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் . visal1
 
“இந்த மாநில மூத்தோர் தடகள போட்டியை பற்றி முன்கூட்டியே தெரிந்து இருந்தால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் நான்  அணுகி, அவர்களிடம் இந்த தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டியின் சிறப்பை பற்றி எடுத்து கூறி இருப்பேன். அடுத்து நடக்க இருக்கும்  மாநில மூத்தோர் தடகள போட்டியில் நிச்சயமாக தமிழ் திரையுலகின் பங்கு பெரிதளவில் இருக்கும் என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன்” என்று கூறினார் நடிகர் விஷால்.