அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் , கலைப்புலி s தாணு கூட்டணியில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார் . சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . R வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி.Continue Reading

விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்.             தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி அன்று   115 வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர்Continue Reading

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார்.சந்தானத்தின் பாட்டியாக நடித்து ள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம்  இப்படத்தில் மூன்று வேடங்களில்Continue Reading

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது!*உலகப் புகழ்பெற்றதும் 193 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதுமான கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகம், நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் உலகளாவிய தமிழ் விருது ஒன்றை நிறுவியிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம் ஒன்றை கனடா வாழ் தமிழ் சமூகத்துடன் அண்மையில்  கையெழுத்திட்டிருக்கிறது.கனடா நாடு தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் ஆதரவை நல்கி வருகிறது. கனடா நாட்டின் நாடாளுமன்றம் 2016-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தைத்Continue Reading

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றது. தில் பெச்சாரே படத்தின் “தாரே கின் ” இரண்டாவது பாடலை மோஹித் செளஹான்Continue Reading

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குநரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குநர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ  ஆண்டுதோறும் Continue Reading

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல் மனதை மயக்கும் மெல்லிசையால் அனைவரின் காதுகளையும் குளிர்வித்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “ஹை ஜோஷ்வா…” பாடல் கருத்தாழம் மிக்க வரிகளுக்காகவும் புதுமையான தாள லயத்துக்காகவும் இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று இரண்டாவது பாடலுக்கான ட்யூனை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே முணுமுணுத்தவாறு அறிமுகப்படுத்திய காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில்Continue Reading

இன்று 78-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ‘இயக்குநர் இமயம்’. பாரதிராஜா அவர்களுக்கு பெருமை மிகு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்க வேண்டுமென்று தேசியவிருதாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கமல் ஹாசன், வைரமுத்து, மற்றும் 25 தேசிய விருது பெற்ற இயக்குநர்கள்-நடிகர்கள்,8 தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர்கள் ,தேசிய விருது பெற்ற எழுத்தாளர், ஆகியோர் இந்திய அரசாங்கத்திடம் இக்கோரிக்கையை வைத்துள்ளனர். இதோ அந்தச்செய்தி !பெறுநர்,திரு. பிரகாஷ் ஜவடேகர்,மாண்புமிகு அமைச்சர், தகவல் &Continue Reading

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்! உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்றுமாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்துContinue Reading

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல.. அது நம் அடையாளம்!  “பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி ….. வணக்கம்.. மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தும் நான்காவது சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி  பேசு தமிழா பேசு 2020 என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் உலகெங்கும் உள்ள  கல்லூரி மற்றும் பல்கலைக் கழக  மாணவர்கள் கலந்துகொண்டு  வெற்றிContinue Reading