C2H மூலம் வெளியாகும் படங்கள் விவரம்!

cheran24C2H மூலம் வெளியாகும் படங்கள் பற்றிய விவரத்தை சேரன்  வெளியிட்டார்.

C2Hன் முதல் வெளியீடாக ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ வரும் 2015 ஜனவரி மாதம் 15ம் நாள்
இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 75 திரையரங்குகளில் வெளியாகும் .வெளியான அன்றே இத்திரைப்படம் DVDயிலும் சட்டப்படி உரிமம் பெற்று வெளியாகும்.

C2H – DVD BAZAAR

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியான அன்றே விநியோகம் செய்ய DVD பஜார் அமைப்பு மூலம் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலும், வீடுகளின் எண்ணிக்கை அடிக்கடையிலும் 154 விநியோகஸ்தர்கள் மற்றும் 5000 முகவர்கள் (DEALERS) நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

C2H நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய கணக்கெடுப்பின்படி 64 சதவீதம் பேர் இந்த C2H நிறுவனத்திற்கு ஆதரவும், DVDகளை வீடுகளில் வாங்குவதற்கான உறுதியும் அளித்துள்ளனர்..
எங்களது கணக்கெடுப்பினை கருத்தில் கொண்டு, ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் முன்கூட்டிய விற்பனைக்கான இலக்கினை மக்களிடம் (PRE ORDER) வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறோம்..

C2Hல் வெளியாகும் திரைப்படங்களின் DVD மேலுறை வடிவமைப்பினை இன்று மக்களிடமும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் வெளியிடுகிறோம்..

ஐயாயிரம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை, கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, போன்ற ஒவ்வொரு மண்டலத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
முகவர்களுக்கான அடையாள அட்டை, கைப்பை, அனுமதிகடிதம் போன்றவற்றை C2H நிறுவனம் நேரடியாக வழங்க இருக்கிறது..

C2H – SET TOP BOXES

C2H நிறுவனம் திரைப்படங்களை SETTOP BOX மூலமாகவும் கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் டெல்லி போன்ற இடங்களிலும் வெளியிடுகிறது.

C2H – ABROAD

C2Hல் வெளியாகும் திரைப்படங்களை குறைவான, சரியான விலையில் உலகளாவிய மக்களுக்கும் சட்டப்படி, சரியான முறையில் உயர்தர வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் (1080P, 5.1) கொண்டு செல்ல ONLINE/ IPTV/OTT போன்ற தளங்களையும் நிறுவியுள்ளது…

NEXT RELEASES IN C2H

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

தயாரிப்பு    :    DREAM THEATRES
இயக்கம்     :    சேரன்
இசை     :     ஜி வி பிரகாஷ்குமார்
நடிப்பு     :     சர்வா, நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம்
·    அர்ஜுனன் காதலி
தயாரிப்பு     :     SS MOVIE MAKERS, SIVASAKTHI PANDIAN
இயக்கம்     :     பார்த்தி பாஸ்கர்
இசை     :     ஸ்ரீ காந்த் தேவா
நடிப்பு     :     ஜெய், பூர்ணா
·    கோடிட்ட இடங்களை நிரப்புக
தயாரிப்பு     :     NIKKI PRODUCTIONScheran6
இயக்கம்     :     பாலன்
நடிப்பு     :     புதுமுகங்கள்
·

வாராயோ வெண்ணிலாவே

தயாரிப்பு     :     ABHISHEIK FILMS
இயக்கம்     :     சசிதரன்
இசை     :     கார்த்திக் ராஜா
நடிப்பு     :     அட்டகத்தி தினேஷ், ஹரி ப்ரியா

அப்பாவின் மீசை

தயாரிப்பு     :     DHAMINI CINEOGRAPHY
நடிப்பு     :     பசுபதி, சேரன், நாசர், நித்யா மேனன்
இயக்கம்     :     ரோகினி
ஒலிப்பதிவு :     ரசூல் பூக்குட்டி
இசை     :     அச்சு

C2Hன் சட்ட ஆலோசனை குழு

NRSP LAW FORCE     –     Mr.Raja Senthoora Pandian and team
HSB ASSOCIATES     –     Mr. Hari Shankar and team
C2H திரைப்பட தேர்வு குழு
1.ஞானவேல் தயாரிப்பாளர்
2.ராஜவேலு வழக்கறிஞர்
3.சமுத்திரகனி இயக்குநர்
4.சசி இயக்குநர்
5.தமிழச்சி தங்கபாண்டியன்
6.சித்ரா லக்ஷ்மணன்
7.சுப்ரமணியசிவா இயக்குநர்
8.S ராமகிருஷ்ணன் எழுத்தாளர்
9.அகத்தியன் இயக்குநர்
10.அனுபமா குமார் நடிகை

C2H விளம்பரங்கள்

சுவரொட்டிகள், கட்டிட விளம்பரபலகைகள் (ACROSS 240 PLACES IN TAMIL NADU), சிற்றுந்து விளம்பரங்கள், வானொலி மற்றும் இணையதள விளம்பரங்கள் மூலம் C2H திரைப்படங்களை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது JK எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் முன்னோட்டத்தையும்,   C2H  விளம்பரப்படத்தினையும் பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிடுகிறோம்.