அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் ‘சுல்தான்’ சென்னையில் பெரிய தாதாநெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. ஆனால், பிரசவத்தில் அவர் இறக்க மகன் பிறக்கிறான். அந்தக் குழந்தைதான் கார்த்தி. அவரை ரவுடிகள்தான் வளர்க்கிறார்கள். கார்த்தி  ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயர் ,இவர்கள் யாரும் ரவுடியாக இருக்கக் கூடாதுContinue Reading

வனமும் வனம் சார்ந்த பகுதிகளுமே படத்தின் ஆதாரம். யானைகள் நடமாட்டம் நிறைந்த ஒரு வனப்பகுதியை ஒரு சாமியாரும் ஒரு மத்திய அமைச்சரும் கார்ப்பரேட் கம்பெனி என்ற பெயரில் ஆக்ரமிக்கத் திட்டமிட்டு வனத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்புகிறார்கள்.  ஈசா மையத்தின் ஜக்கி வாசுதேவ் நினைவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவரைப் போலவே ஒரு சாமியாரை ரெடி செய்து இதில் டான்ஸ் ஆட விட்டிருக்கிறார், இயக்குநர் பிரபுContinue Reading

ஒரு மனிதன் மிருகமாக மாறிக் குற்றச் செயல்கள் செய்வது பற்றிய கதை.ஸ்ரீகாந்த்,ராய் லட்சுமி பிரதான வேடமேற்க ஜெ.பார்த்திபன் இயக்கியுள்ளார். பணக்கார விதவை பெண்களை நல்லவன் போல் நடித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துக்களை அனுபவிப்பது, தன் மீது சந்தேகம் வந்ததும் அவர்களை தடயம் இல்லாமல் கொன்றுவிட்டு வேறு மாநிலம் தப்பிச்சென்று விடுவது தான் அர்விந்தின் (ஸ்ரீகாந்த் ) வழக்கம். அப்படி ஒருமுறை கோவாவில் தன் மனைவி, மாமியார்,Continue Reading

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்டது இத்திரைப்படம். ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். . அறிமுக இயக்குநரான  ஜெய்சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.  சிறுContinue Reading

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே  நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த  அன்பிற்கினியாள்.  மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியாகி வென்ற,  ‘ஹெலன்’ படத்தை  ரீமேக் செய்திருக்கிறார்கள்.’ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கிய ஐந்தாவது படம். மறு ஆக்கம்Continue Reading

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி? மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் விபரீதத்தை விளக்கும் படம் தான் ’சக்ரா’.  டிஜிட்டல் உலகில் நம்மையே அறியாமல் திருடப்படும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு ஆபத்தானதாக பயன்படுத்த முடியும் என்பதே சக்ராவின்Continue Reading

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள்.கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். ஒருவரை ஒருவர்  ஜாலிக்காக கலாட்டாவுக்காக கலாய்த்துப்பேசி, கவிழ்த்து விளையாடுவார்கள். அப்படி ஒருமுறை அருள்நிதி பற்றி ஜீவா கூறிய வேடிக்கையான சீண்டல் விபரீதமாக அவரது வாழ்க்கையைப் பாதிக்கிறது. அவர்களுக்குள் விரிசல் உண்டாகிறது . அதன்பின் .பிறகு அது சரி செய்யப்படுகிறதா இல்லையா என்பது கதை. . ஜீவா, அருள்நிதி என இருவருமே அந்தந்தக்Continue Reading

பூமி படத்தின் ஹீரோவான பூமிநாதனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்யும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து தான் நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி என்று கூறி, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன்(சரண்யா பொன்வண்ணன்) தமிழகத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார். ஒரு மாத விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு வருகிற அவர்  அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, இங்கேயேContinue Reading

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் ’மாஸ்டர்’ படத்தின் மையக்கரு. இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் சில இடங்களில் ஜெயித்திருக்கும் லோகேஷ் கனகராஜ்Continue Reading

கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். முதியவர்களின் நிலைமையை எடுத்துக்கூறும் இந்தப் பாடல்வரிகள் பிரபலமானவை. “கடந்த காலமோ திரும்புவதில்லை நிகழ்காலமோவிரும்புவதில்லை எதிர்காலமோ அரும்புவதில்லை “என்கிற அந்த வரிகளில் பொதிந்திருக்கும் சோகத்தை அறுபது எழுபதைக் கடந்த அனைத்து முதியவர்களும் அனுபவித்து வருவதை ஆங்காங்கே காண முடியும். இதற்கு நிகழ்கால சாட்சிகளாக முதியோர் இல்லங்களும் வீட்டில் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முதியோர்களும் இருப்பதைக்Continue Reading