முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கைக் கதையின் மையச் சரடை எடுத்துக்கொண்டு அதைச் சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இது பயோபிக் அல்ல என்பதைப் புரிந்து ரசிக்கவேண்டும். எளிய மக்கள் விமானத்தில் பறக்கContinue Reading

   புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையைக் கேள்விப்பட்டிருப்போம் .எமனிடம் போய் இறந்து போன கணவனின் உயிரை மீட்டு வருவாள் சாவித்திரி.‘கணவர் பெயர் ரண சிங்கம்’ படத்தில் வெளிநாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவர மனைவி செய்யும் விடாத போராட்டம்தான் கதை. ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் கண்ணீர் கசியும்  கதை இது. கருவேலமரங்கள் சூழ காய்ந்து போய்க் கிடக்கும் ராமநாதபுரத்தின் ஒரு சிற்றூரில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் ரணசிங்கம். . அங்கேContinue Reading

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது மூடப்பட்டுள்ள நிலையில், ஒடிடி தளத்தில் முன்னணியிலுள்ள அமேசானில் நேரடியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் மர்ம மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்ட இன்னொரு பெண் நிகழ்த்தும்Continue Reading

பெரிதும்எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தின்டிரெய்லரை அமேசான்பிரைம்வீடியோ வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகும் வசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இது நேர்மையான ஒரு வழக்கறிஞர்  தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’, பிரைம் உறுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர்.  உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித்தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.  ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம். இது குறித்து அமேசான் பிரைம் வீடியோவின் உள்ளடக்க இயக்குநரான விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: “அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பார்வையாளர்களுக்கு இன்னொரு உயர்தர திரைப்படத்தை காண்பிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இத்திரைப்படத்தை உலகாளவிய அளவில் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு கொண்டுசெல்வதன் மூலம் தமிழ்சினிமாவின் இந்த  இதுபோன்ற உலகளாவிய திரைப்படத் திரையிடல்கள் மூலம், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப எப்போதும், எங்கேயும் பார்க்கும்படி தொடர்ந்து சிறப்பான திரைப்பட அனுபவங்களை தருகிறோம். இவ்வாறு விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது குறித்து 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறியுள்ளதாவது: “‘பொன்மகள் வந்தாள்’ வெளியீட்டிற்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த அற்புதமான திரைப்படத்தை இந்தியாவிலும், உலகெங்கிலும் இருந்து பார்த்து ரசிக்க முடியும். தமிழ்மொழியில் பரபரப்பாக எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களை தங்கள் இருக்கையின் விளிம்பிற்கு கொண்டுவரக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு, அற்புதமான வரவேற்பு கிடைத்தது, தொடர்ந்து பலரும் படம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும், பார்வையாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சிறந்ததொரு படைப்பை வெளியிடும் நாளையும் நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றும் கூறினார். ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், ஜோதிகா மற்றும் சூர்யாவின்  2D என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். சூரியா சிவகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.  ஜே.ஜே.ப்ரட்ரிக் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பொன்மகள் வந்தாள்’ பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள, பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில்,  Paatal Lok, The Family Man, Four More Shots Please, Mirzapur, Inside Edge, The Forgotten Army மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag  மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் இதில் உட்படும். இவைகள் அனைத்தும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும். இச்சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன. GulaboContinue Reading

விக்ரம் பிரபு ,மஹிமா நம்பியார் ,யோகிபாபு, ஜெகன் ,சுப்புராஜ் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியுள்ளார் ராஜதீப். ஒளிப்பதிவு- ராமலிங்கம் . தயாரிப்பு – ஜெ.எஸ்.பி.சதீஷ். நாயகன் விக்ரம் பிரபு ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் . அவருக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு. கணக்கில் காட்டாத  பணத்தைச் சேர்த்து வைக்கிற ஆட்களின்  கறுப்புப் பணம்தான்  இவரது குறி. அதைக் கொள்ளையடித்து தன்னுடைய  அறை முழுக்க நிரப்பி அழகு பார்க்கிற ஆள். அதை இல்லாதவர்களுக்குContinue Reading

இந்தியில் விந்தணு தானத்தை மையமாக வைத்து 2012-ம் ஆண்டு  வெளியான விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கே தாராள பிரபு.  விந்தணு தானம் அளிக்கும் இளைஞன் சந்திக்கும் போராட்டங்களே ‘தாராள பிரபு’ படத்தின் கதை.  சென்னை பாரிஸ் கார்னரில் செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார் விவேக். அவர் தன்னைத் தேடி வரும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஒரு ஆரோக்கியமான இளைஞரை தேடி அலைகிறார். அப்பொழுது தான் அவர் ஹரிஷ் கல்யாணைச் சந்திக்கிறார்.Continue Reading

கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள்Continue Reading

காதலை வைத்து சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இயக்குநர் வ.கீரா, பேசியிருப்பது தான் ‘எட்டுத்திக்கும் பற’ உயர்ந்த சாதியினர் என்று சொல்பவர்களின் பெண்ணும், தாழ்ந்த சாதியினர் என்று சொல்லக்கூடிய ஆணும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காயும் அரசியல்வாதிகளின் முகத்திரையை இயக்குநர் கீரா கிழித்திருக்கிறார். காதல் என்பது பணம், மதம், சாதியை பார்த்து வருவதில்லைContinue Reading

 மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான்  ‘ஜிப்ஸி’ . குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும்  ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து பிழைத்து வருகிறார்.    பிழைப்புக்காக தமிழகத்திற்கு வரும் ஜீவாவுக்கு, முஸ்லீம் பெண்ணான நாயகி நடாஷா சிங் மீது  காதல் வருகிறது. அவருக்கும் ஜீவா மீது   ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே, நடாஷாவுக்குContinue Reading

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய ஆடிட்டராக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார். தனது ஆசையை மகனிடம் கூறுகிறார் .அதன்படியே சிரமப்பட்டு சீட்டு பெற்று கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால் மகனோ படிப்பதை விட்டுவிட்டுக்  காதலில்Continue Reading