முற்பகுதி காதல் பின்பகுதி மோதல் என்று உருவாகியுள்ள ரொமான்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் படம் ‘யான்’ துளசியைக் காதலிக்கிறார் ஜீவா. துளசியின் அப்பா கேட்கிறார் ‘பெற்றோர் இல்லாத நீ , பாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நீ என் மகளை எப்படிக் காப்பாற்றுவாய்?’ என்று. நாயகனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. வெளிநாட்டு வேலை என்று பசிலிஸ்தான் போகிறார். ஆனால் அங்கு ஏர்ப்போட்டில் மாட்டிக் கொள்கிறார். அவரது பையில் அவருக்குத் தெரியாமல் போதைContinue Reading

சினிமாவைவிட கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கிரிக்கெட் பின்னணியில் வந்திருக்கும் படம். சென்னை 28, ஆடாம ஜெயிச்சோமடா படங்களுக்குப் பின்  ‘ஜீவா’கிரிக்கெட் பற்றி பேசுகிறது. அதன் பின்னணி கூறும் படமாக வந்துள்ளது. மோகமாக அலையவைக்கும் கிரிக்கெட் எப்படி ஒருவனை நல்வழிப் படுத்துகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம். நாயகன் சிரிக்கெட் மோகம் உள்ளவன். பெற்றோரோ அவன் நல்ல பிள்ளையாக மாறி அரசுவேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இச்சூழலில் அவனுக்குContinue Reading

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா ‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஒரு சுவரில் படம் வரைவதில் தொடங்கும் அரசியல் பகையை, துரோகம், பணம் போன்றவை எப்படி எல்லாம் கூர்தீட்டி பெரும்பகையாக்கி அரசியலாக மாற்றி பலரைப் பலி கொள்கிறது என்பதே கதை. இதன்Continue Reading

நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். அவரது காதலி க்கு தன் அப்பாவைப் போல கணவரும் போலீஸ்ஆக இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லாத விக்ரம் பிரபு போலீஸ் அகாடமி பயிற்சிக்கு தேர்வாகிறார். காதலிக்காக போலீஸ் வேலையைContinue Reading

லஞ்சத்தை எதிர்த்து பலரும் படம் எடுத்திருக்கிறார்கள். ‘புதியதோர் உலகம் செய்வோம்’ லஞ்சத்துக்கு எதிரான எளிய முயற்சி. லஞ்சத்தை ஒழிக்க வீட்டிலேயே தொடங்குங்கள் என்கிற அப்துல்கலாமின்  கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். பி.நித்தியானந்தம் இயக்கியுள்ளார். நாகராஜன்ராஜா தயாரித்துள்ளார். சூப்பர் சிங்கர்ஸ் போட்டியில் வெற்றிபெற்ற  ஆஜத்,அனு,யாழினி,பிரவீன்,சந்தியா,சூர்யேஸ்வர் போன்ற சிறுவர்களை முக்கிய பாத்திரமேற்க வைத்துள்ளார்கள். இமான் அண்ணாச்சியை ஒரு முழுநீள பாத்திரம் ஏற்க வைத்துள்ளார்கள். நான்கு சிறுவர்கள் நண்பர்கள். அவர்களில் ஒருவனின்  அப்பாContinue Reading

பார்க்கும்படியான பரத், நடிககத் தெரிந்த நந்திதா, காமடி தர்பாரே நடத்தும் படி எம்.எஸ். பாஸ்கார், மனோபாலா  போன்ற 18 நகைச்சுவை நடிகர்கள்   இருந்தும் என்ன இப்படம் எக்ஸ்பரி டேட் மருந்து போல எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது. பரத் ஒரு சித்தா டாக்டர். படிக்காதவர். அவரை எம்பிபிஎஸ் டாக்டர் என்று நம்பி நந்திதாவுக்கு நிச்சயம் செய்து விடுகிறார்கள். படிக்காத நம்மை டாக்டர் என்று பொய் சொல்லி விட்டார்களே எனContinue Reading

புதுமைப் பித்தன் பார்த்திபன் இயக்கியுள்ள படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இது ஒரு கதை இல்லாத படம்  என்று சொன்னது ஒரு கவர்ச்சிக்குத்தான். கதையில்லாது எப்படி இரண்டரை மணி நேரம் ஓட்டுகிறார் என்று பார்ப்போமே என்கிற எதிர்பார்ப்பை ஆவலைக் கிளப்பிவிட்டு விட்டார். நிஜத்தில் இதில் கதையில்லாமல் இல்லை. இதை சினிமா உதவி இயக்குநர் ஒருவரின் கதை எனலாம். படத்தின் கதை விவாதமே முக்கிய களம். எ பிலிம் வித்தவுட்Continue Reading

சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா, கருணாகரன், நாசர், நரேன், டெல்லிகணேஷ், சங்கிலி முருகன் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார் ஒளிப்பதிவு கேவ்மிக் யூ ஆரி. இசை–சந்தோஷ் நாராயணன். தயாரிப்பு க்ரூப் கம்பெனி எஸ்.கதிரேசன். குறும்பட இயக்குநரான சித்தார்த்துக்கு ஒரு பட வாய்ப்பு கிடைக்கிறது. ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படமாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் கூறவே.. அப்படி ஒருவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன்தான்மதுரையைக் கலக்கி வரும் தாதா சேது.  அவன்Continue Reading

கண்தெரியாத காதலர்கள் சம்பந்தப்பட்ட கதையைத் தன் முதல் படமாக எடுத்துக் கொண்ட துணிச்சலான முயற்சிக்கு முதலில் புதுமுக இயக்குநர் ராஜுமுருகனை கைகுலுக்கிப் பாராட்டலாம். பார்வையற்றோர் விடுதியில் படித்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள சுதந்திரக்கொடிக்கும் பார்வையற்ற இளைஞன் தமிழுக்கும் செவியில் விழுந்து இதயம் நுழைந்து விடுகிறது காதல். சுதந்திரக்கொடியின் அண்ணன் தன் தங்கைக்குஅரசுவேலை வாங்கி இன்னொருவனுக்கு மணம் முடித்து அவளது சம்பளத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறான். வேலை வாங்க வருங்கால மாப்பிள்ளைContinue Reading