பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் ‘மட்டி’.முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழிலும் உருவாகியுள்ளது. மட்டி படத்தின் கதை மிகவும் எளிமையானது. அண்ணன் தம்பி இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன் உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார் எனContinue Reading

தனது ’வெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவசந்தபாலன், இப்போது ‘ஜெயில்’ படத்தில் அவரைக் கதாநாயகனாக்கி இருக்கிறார். நகர்ப்புறத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்த சென்னையின் பூர்வீகக் குடிகளை, அவர்கள் காலகாலமாக வசித்திருந்த வாழ்விடங்களில் இருந்து அகற்றிச் சென்னைக்கு 30 கி.மீ தள்ளி மறு குடியமர்வு செய்திருப்பதைப்பற்றிச்சொல்வதாக ஆரம்பிக்கிறது படம். கண்ணகி நகர் என்பதை காவேரி நகர் என்று பெயர் மாற்றி, அங்கு வாழும் கர்ணன், ராக்கி, கலை எனும் மூன்று இளைஞர்களின்Continue Reading

100 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் மரைக்காயர் (அரபிக் கடலின் சிங்கம்).சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த சினிமா தேசியவிருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாகContinue Reading

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ‘ஸ்டண்ட் சில்வா’ முதல் முறையாக இயக்குநராகியுள்ள படம். சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் ,சிறுமி மானஸ்வி, ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ்,படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ம்,பணிபுரிந்துள்ளனர். பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.Continue Reading

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் ,நிக்கிகல்ராணி , ராதாரவி ,தம்பி ராமையா ,விஜயகுமார் , சதிஷ் , மனோபாலா, சிங்கம்புலி , யோகிபாபு , ஆடம்ஸ் , சரவணசக்தி, ,ரமணி , ராஜ்கபூர் ,தாஸ் , நமோநாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தானலட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணிசந்தனா ,மணிமேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் .Continue Reading

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா ,எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தனது நண்பரான பிரேம்ஜி கல்யாணத்திற்காக துபாயிலிருந்து விமானத்தில் கோவை வரும் சிம்புக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வருகிறது. அதில் சிம்பு முதல்வரான எஸ்.ஏ. சந்திரசேகரை சுட்டுக்கொல்கிறார். இந்த சம்பத்தில் இருந்து சிம்பு முதல்வரான எஸ்.ஏ சந்திரசேகரை எப்படிContinue Reading

நகைச்சுவை நாயகன் சந்தானம் கதையின் நாயகனாக மாறி நடித்திருக்கும் படம் ‘சபாபதி’.இது வழக்கமான கேலி கிண்டல் நக்கல் கடி ஜோக் ஆக்கிரமிக்கும் சந்தானம் படமா? வேறு மாதிரியா என்பதைப் பார்க்கலாம். படத்தின் கதை என்ன? சிறுவயதிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கித் திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்கContinue Reading

காலச்சக்கரம், காலச்சுழற்சி, காலக் கடிகாரம் இந்த வகையான கதைகளைப் பார்த்திருக்கிறோம் . டைம் லூப் என்கிற விஷயத்தை எடுத்துக்கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ஜாங்கோ. முதலில் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு அதீத கற்பனை கதையைப் படமாக்கத் துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரைப் பாராட்ட வேண்டும்.படம் எப்படி என்பதைப் பார்ப்போம். டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.Continue Reading

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். இது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. படமே ஒரு கொடூர கொலையில் தொடங்குகிறது. அதுவும் அதிகாலையில் நீதிபதி வீட்டு வாசலில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க வரும் போலீஸ் தரப்பு விசாரணையில் சற்றே சுணக்கம் ஏற்படவே வழக்கில் உயிர்ப்பூட்ட நியமிக்கப்படுகிறார் டிசி பொன்Continue Reading

சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் ராஜாகண்ணு செங்கல் சூளையில் வேலை செய்பவன். பாம்பு பிடித்து காட்டுக்குள் விடுவது அவனது உப வேலை. இப்படித் தன் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவி செங்கேணி மாமாContinue Reading