‘ஜீவி’ விமர்சனம்

வி. ஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன், மைம் கோபி, மோனிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ஜீவி திரைப்படம் எப்படி என்பதைப் பார்ப்போம். 

வெற்றியும் கருணாகரனும் ஒரே கடையில் வேலை பார்க்கும் அறைவாசிகள். ஏழ்மையின் விரக்தியில் இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டு ஓனரின் நகைகளை திருட முயற்சிக்கின்றனர். அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கிறது? இவர்களின் நிலைமை என்ன ஆனது என்பது தான் வித்தியாசமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் கதைக்களம்.

வெற்றி 8 தோட்டாக்கள் படத்திலேயே தயக்கம் இல்லாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் அதைவிட சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கருணாகரன் காட்சிகளை விவரிக்கும் விதமும் அவருடைய நடிப்பும் நன்று, அவருக்கு இனி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என நம்பலாம்.மோனிகா, மைம் கோபி என மற்றவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

கே.எஸ் சுந்தரமூர்த்தியின் இசை படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலன் என்று கூறலாம். ஒரு ரூமிற்குள்ளவே பல காட்சிகள் என்றாலும் அதனை துளியும் போர் இல்லாமல் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

கோபிநாத்திற்கு இது அறிமுக படம் தான், ஆனால் படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அப்படியான உணர்வு வராத அளவிற்கு அபாரமான கதை சிந்தனையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார்.

ஒரு சாதாரன ரசிகனுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கூட அவர்களே படத்தில் பதில் வைத்திருப்பது அற்புதமான ஒன்று.
படத்தின் கதை, திரைக்கதை,வசனங்கள்,ஒளிப்பதிவு,படத்தின் கிளைமேக்ஸ்,வெற்றி, கருணாகரனின் நடிப்பு என அனைத்திலும்  அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்கள். யாரும் எதிர்பார்க்காத உச்சகட்டகாட்சியால்  இயக்குநர் நம்மை ஒட்டு மொத்தமாக கவர்ந்து விட்டார்.

Pin It

Comments are closed.