ஒரு மணிநேரத்தில் நடக்கும் கதை ‘கிரகணம்’

தமிழ் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவம் எடுக்கும் அந்த வகையில் கிரகணம் ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதை என்கிறார் இயக்குநர் இளன், இப்படத்தின் கதையைப்பற்றி அவர் கூறுகையில் சந்திர கிரகணம் நிகழும் ஓர்நாள் இரவில் நம் கதையின் கதாபாத்திரங்கள்  வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒருமணி நேரம் தான்.அந்த ஒருமணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரப்பரப்பாகவும் திகிலாகவும் திரைக்கதை அமைந்திருப்பதாக கூறுகிறார். ஒரு நாள்,ஒரு இரவு  என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குநர்கள் மத்தியில்  ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை சொல்கிறார் என்றால் ஆச்சர்யம்தான்.இதில் நாயகர்களாக கிருஷ்ணா,சந்திரன் இணைந்து நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார்.இவர்களுடன் கருணாஸ்,கருணாகரன்,ஜெயபிரகாஷ் ,பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு மணிகுமரன் சங்கரா. தயாரிப்பு :  கே.ஆர்.பிலிம்ஸ்  சார்பில் சரவணன் & கார்த்திக், இணை தயாரிப்பு:  சிவக்குமார்.

ஒரு மணிநேரத்தில் நடக்கும் கதை ‘கிரகணம்’ Read More

72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா!

‘கிரகணம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். “ ‘யட்சன்’ படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியிருந்தது. மற்றும் ‘விழித்திரு’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. தேதிகள் …

72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா! Read More