9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா :தமிழ்ப் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் !

அனைத்து உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் ! 9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2018 26.-29.சித்திரை 2018 [நான்கு நாட்கள்] தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகின்றது.  அதனுடைய வளர்ச்சியில் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வாக சிறந்தகலைஞர்களுக்கு தமிழர் விருது வழங்கி, சிறந்த மதிப்பளிக்கும் பணியினை, ஒசுலோ நகரசபை முதல்வர் மரியான்னே போர்கன் தலைமையில்  நோர்வே தமிழ்திரைப்பட விழா செய்து வருகின்றது. தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் உலகவலம்செய்துவருகின்றது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற “தமிழர் விருது” தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேசதிரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச் சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா வளர்த்து வருகின்றது. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும், ஆங்கிலத் திரைப்படங்களின் தரங்களை தாண்டும் அளவிற்கு தொழில்நுட்பம் தமிழ் சினிமாவிலும் நிறைந்துவிட்டது.2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 20 அதி சிறந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருப்பது, எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நெறி முறையில்  அவை ஆற்றும் முக்கிய பங்கு , தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இருக்கிறார்கள். உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக உலக அரங்கில் பேசப்படுகிறது. இத்திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைத்ததில் , நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம் பெருமை அடைகிறோம். Norway Tamil Film Festival 2018 [26th april – 29th april] SUBMISSIONS ARE NOW OPEN!! NTFF 2018 Categories: …

9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா :தமிழ்ப் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் ! Read More