பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி, இளவரசு, பால சரவணன் நடித்துள்ளனர்.
ஒரு முதலமைச்சர் கடத்தப்படுகிறார் கடத்தியிருப்பது ஒரு கும்பலா என்றால் தனியொருவன்.அவன் ஏன் கடத்தினான் பின்னணி என்ன என்று சொல்கிற படமே ‘கோ2’.
கடத்துபவராக பாபி சிம்ஹா, முதல்வராக பிரகாஷ்ராஜ், உதவி செய்யும் நண்பனாக பாலசரவணன். செய்தியாளராக நிக்கிகல்ராணி.
முதல்வர் கடத்தப் படும் கதைகள் ஏற்கெனவே பல இருந்தாலும் இதில் கடத்துபவரும் சொல்லப்படும் காரணமும் புதிது. முடிவும் க்ளைமாக்சுக்கு ஏற்ற வழக்கமான ஆரவாரம் இல்லாமல் முடித்துள்ளர்கள்.
படத்தில் பாபி சிம்ஹா. பாலசரவணன் நட்பும் உரையாடலும் சலிப்பூட்டுகிறது. பிரகாஷ்ராஜ்– பாபி சிம்ஹா. உரையாடல் சுவை. முதல்வராக வரும் பிரகாஷ் ராஜ் படம் முழுக்க வருகிறார். தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பிரகாஷ்ராஜ் ஸ்கோர் செய்கிறார் .பாபிசிம்ஹா. பாத்திரத்தில் சித்தரிப்பு போதாது .சமூக சேவகராக வரும் நாசர் ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரனின் நடிப்பு பிரமாதம்.
. இளவரசுக்கு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்து இருக்கிறார்.
கோ-2′ வில் வரும் நடப்பு அரசியல் காட்சிகள், மக்களின் போக்கு போன்றவை தேர்தல் நேரத்தில் வெளியாகியிருப்பதால் கூடுதல் கவனமும் சுவையும் பெறுகின்றன என்பது உண்மை.