உலகெங்கும் ஆண்டுதோறும் மே மாதம் 13 ஆம் தேதி அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகளிர் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி, சென்னையில் தன்னிகரற்ற மருத்துவமனையாக இயங்கி வரும் இண்டிகோ உமன்’ஸ் சென்டர் மற்றும் கருதரிப்பு மையம் பெண்களுக்கான சிறப்புச் சலுகையை அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் அவளது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது அவள் தாய்மையடைந்து, அன்னையாக மாறும் தருணத்தில்தான். இதற்காகவே அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் உள்ள “இண்டிகோ உமன்ஸ் சென்டர் மற்றும் கருத்தரிப்பு மையம்” சார்பாக அன்னையர் தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடக்கும் விழா இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரத் பட்டினா, டாக்டர் சுரக்சித் பட்டினா மற்றும் டாக்டர் ஸ்ரீலதா கன்கனாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இதற்கான பத்திரி்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட டாக்டர் சரத் பட்டினா பேசுகையில்,
“பெண்கள் அவர்கள் தாய்மை அடைவதில் உள்ள சிக்கல்களை நவீன பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களைத் தாய்மை பேறு அடைவதற்குரிய முழு தகுதியை உருவாக்குகிறோம். இதற்காக தேவைப்படும் அனைத்து மருத்துவ உதவிகளையும் நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். நாங்கள் குழந்தையின்மைக்காக சென்னையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பெண்மணிகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் 100 குழந்தைகளை பிரசவித்து சாதனைப் படைத்திருக்கிறோம்.
நாங்கள் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையுடன் இயற்கையான முறையில் கருத்தரிப்பை உறுதிச் செய்யக்கூடிய மருத்துவ சிகிச்சைகளையும் செய்து வருகிறோம். அதற்கான ஆலோசனைகளையும் தம்பதிகளுக்கு வழங்கி வருகிறோம். இங்கு மருத்துவமனை சூழல் இருக்காது. வீட்டில் உள்ளதைப் போல் உணர்வார்கள். ” என்றார்.
டாக்டர் ஸ்ரீலதா பேசுகையில், “இன்று மூன்றுக்கு ஒருவர் என்கிற அளவில் கருவுறுதலில் சிக்கல் உள்ளது. இதை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்வதில்லை. நமக்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறார்கள். அது தவறாகும்.
கருத் தரிக்கும் பெண்களையும் கருத் தரிப்பில் சிக்கல் உள்ள பெண்களையும் நவீன பரிசோதனைகள் மூலம் சோதித்து அவர்களின் பிரச்சினையை துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கிறோம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் விசயத்தில் அறிமுகமாகியிருக்கும் நவீன பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு பரிசோதித்து தீர்வளித்து வருகிறோம். பெண்கள் எவ்வித தயக்கமும் இன்றி எங்களை அணுகலாம் . இது மருத்துவமனை போலல்லாமல் உங்கள் வீட்டைப் போல உணரலாம் . .” என்றார்.
இந்த மருத்துவமனையில் எண்டோகோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் சுரக்சித் பட்டினா பேசுகையில்,
” அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
கருத்தரிப்பு சார்ந்து மட்டும் சென்னையில் 63 மருத்துவ மனைகள் இயங்கி வருகின்றன. நாங்கள் வெறும் கருத்தரிப்பு சிகிச்சையுடன் நிற்கவில்லை. பெண்கள் சார்ந்து உள்ள பல்வேறு பிரச்சினை களுக்கும் ஒரே குடையின் கீழ் தீர்வு தருகிறோம். பொதுவாக 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் திருமணமான பிறகு ஓராண்டு வரை இயற்கையான முறையில் தாம்பத்யம் மேற்கொண்டு தாய்மையடைய வேண்டும். அது நிகழாத போது தாமதிக்காமல், இது குறித்து மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும். அப்போது தான் அவர்களால் மகப்பேறின்மைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளித்து, தாய்மைபேறை அடைய இயலும். அதே போல கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு பிரசவ காலங்களில் வலி தெரியாமல் இருக்க நவீன உத்தி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. இதனை பயன்படுத்தி வலியில்லாமல் குழந்தையை பெற்றெடுக்க இயலும். இதன் மூலம் பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அளவற்ற இரத்தப் போக்கு கட்டுப்படுத்தப்படுவதுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தையும் முற்றாகத் தவிர்க்க முடியும்.
கருத்தரிக்கும் பெண்களுக்கு அடிக்கடி கரு கலைதல் நடைபெற்றால், சற்றும் தாமதிக்காமல் உடனடியான மருத்துவர்களைப் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
நாங்கள் 2.5 கிலோ எடையுள்ள மிகப்பெரிய ஃபைப்ராய்ட் கட்டியை லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறோம். அதே போல் அடிக்கடி கரு கலைதல் நடைபெறும் பெண்களுக்கு லேப்ராகோப்பிக் உதவியுடன் நவீன மூறையிலான செர்விக்ஸ் ஸ்டிச் என்ற உத்தியை கையாண்டு, அவர்களின் கரு கலைவதைத் தடுக்கிறோம்.
அத்துடன் நாங்கள் உடற்பருமனைக் குறைக்கும் பேரியாட்ரிக் ஆபரேசனையும் வெற்றிகரமாக மேற்கொள்கிறோம். அதே போல் காஸ்மெடிக் கைனகாலஜி துறையிலும் மகளிருக்காக சேவையாற்றி வருகிறோம்.
இங்கு நிறுவப்பட்டுள்ள லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெக்டமி , லேப்ராஸ்கோபிக் மையோடெக்டமி , லேப்ராஸ்கோபிக் ஓவேரியன் சிஸ்டக்டமி , லேப்ராஸ்கோபிக் பர்ச் கொல்போ சஸ்பென்ஸன் ,ஆபரேடிவ் ஹிஸ்டெரோஸ்கோபி போன்ற வசதிகள் அதிநவீன மானவை . குறுகிய கால மருத்துவமனை தங்கல் , காயங்கள் இல்லாமை , துல்லியம் போன்றவை இவற்றின் சிறப்புகள் .
மாறி வரும் வாழ்க்கை முறையில் உணவுப் பழக்கம் மாறி விட்டது, சீரான இடை வெளியில உணவை உண்பதில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும். ” என்றார்.