அப்புக்குட்டி நடிக்கும் ‘காகித கப்பல்’

kkpl22ஒன்பது வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன். படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆனது.

 

மறந்தேன் மெய் மறந்தேன், சொல்லித்தரவா, அன்பா அழகா ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன் இந்த படத்தை இயக்குகிறார்.

 

இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர்வி.ஏ.துரை கூறுகையில் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக இருக்கும் இயக்குநர் எஸ்.சிவராமன் அவர்களை எனக்கு பல வருங்களாக தெரியுமென்றும், மூன்று படங்களை இயக்கிய இவர் தன்னிடமும் கதையின் நாயகன் அப்புக்குட்டியிடம் இந்த படத்தின் கதையைக்கூற மிகவும் பிடித்துவிட்டதாக கூறினார். என்னமா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா போன்ற பெரிய படங்களை இதுவரை தயாரித்து வந்த தங்களுக்கு சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை தரமாக இயக்கிய எஸ்kkpl1 .சிவராமன் கண்டு பிரம்மிப்பதாக கூறினார். மேலும் இப்படம் எளிய மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக படம்பிடித்து காட்டும் என்று கூறினார்.

 

இசையமைப்பாளர் நிஜாம் இசையில் “வித்தைக்காரி ஜெகஜால வித்தைக்காரி”, “ஆகாய கடலிலே காகித கப்பல்” ஆகிய இரண்டு பாடல்களை கவிஞர் கலைக்குமார் எழுதியுள்ளார். இப்படத்தில் “தல” அஜீத் அவர்களின் பெருமையை அப்புக்குட்டி பாடுவது போல் “அம்மா அப்பா குடும்பத்தை பாரு” என்ற பாடலை கவிஞர் விவேகா எழுத சாண்டி ஆடியுள்ளார்.