செல்வந்தன் “ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ புருஸ்லீ – 2 தி பைட்டர் “ தெலுங்கில் ” புருஸ்லீ தி பைட்டர் “ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரில் உருவாகிறது.
அடுத்த மாதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது.
ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரகுல் பிரீத்தி சிங் நடிக்கிறார். மற்றும் இந்த படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். மற்றும் அமிதாஸ், நதியா, சம்பத், ஷாயாஜி ஷிண்டே கீர்த்தி கர்பந்தா, ராவ்ரமேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – எஸ்.எஸ்.தமன்
பாடல்கள் – விவேகா
ஸ்டன்ட் – அனல் அரசு
எடிட்டிங் – எம்.ஆர்.வர்மா
இணை தயாரிப்பு – வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா
தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்.
இயக்கம் – சீனு வைட்லா.. இவர் இயக்கத்தில் வெளியான “ டி “ ரெடி “ வெங்கி, “ கிங் “ நமோ வெங்கடேஷ் “ தூக்குடு, பாட்ஷா, துபாய்சீனு, போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த படம் பற்றி வசனம் எழுதி தமிழாக்கம் செய்யும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்.. டைட்டிலுக்கேற்ப அதிரடி ஆக்ஷன் படம் இது. ஐந்து சண்டைக் காட்சிகள், ஐந்து பாடல் காட்சிகள் என செம்ம கமர்ஷியல் ரகம்.
ராம்சரண் படம் என்றாலே ஆந்திர மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கும். டைட்டில் வேறு புருஸ்லீ என்று வைத்ததால் இன்னும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது என்றார் ராஜராஜன்.
பத்ரகாளி பிரசாத் கூறும் போது 1986 ம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ஒரு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு ராம்சரண் நடிக்கும் “ மகதீரா, புருஸ்லீ உட்பட பல படங்களை ரிலீஸ் செய்து, அடுத்த தலைமுறையுடனும் என் பயணம் தொடர்கிறது என்றார் பெருமையுடன்.