

இவ்வாய்ப்பின் மூலம் ‘அழகிய தமிழ் மகள்’ மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாதஇதழ், ‘வாவ் செலிப்ரேசன்’ இதை, டேக் கேர் இந்தியா, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் நிறுவனத்துடன் இனைந்து போட்டியை வழங்குகிறது.

மறைந்த பத்ம ஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள், உலக தமிழ் பெண்கள் அழகி போட்டியின் லோகோவை ஏற்கெனவே அறிமுக படுத்தி, அழகு போட்டியை துவக்கி வைத்துள்ளார். இந்தப் போட்டி பல்லாயிரகணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டு தளத்தில் இணைக்க முனைப்பாய் செயல்படுகிறது. கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.