Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.
முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லப்படும் வார்த்தைகளாகும், ஆனால் இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தத்தை தந்து, முதல் முறையாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது “பிகினிங்” பட டிரெய்லர்.




இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.
.