‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே. ஷாஜி கைலாஸ்இணையும் மூன்றாவது படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.எனவே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று காலை ஏவி எம் பிள்ளையார்கோவிலில் நடைபெற்றது.
இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று ஏவி.எம் ஸ்டுடியோவில் நடெபெற்றது.
நிகழ்ச்சியில் ஆர்.கே. பேசும்போது “நானும் ஷாஜிகைலாசும் இணையும் 3 வது படம் இது. நீங்களே எத்தனை படம் தொடர்ந்து செய்வீர்கள் என்கிறார்கள். நல்லவர்களுடன் இணைந்திருப்பது நல்லதுதான்.
இந்தக் கதைபற்றிக் கூறும் போது இது ‘எல்லாம் அவன் செயல் படத்தைப் போல 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என்றார். உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். என்றார் அப்போது நான் நினைத்தேன். நாம் விரும்புகிறவரை விட நம்மை விரும்புகிறவரை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல காதலுக்கு நல்லது. அதுபோல்தான் சினிமாவும் என்பேன். இந்தப் படக்கதை எனக்காக உருவானதால் ஏற்றுக் கொண்டேன்.
இது நிச்சயமாக தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதை. முழுக்கதையும் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் நடக்கிறது. .மூன்றே மாதத்தில் எடுக்கத்திட்டமிட்டுள்ளோம். இன்று தொடங்கி விட்டோம் .”என்றார்.
நீது சந்திரா இதில் இரு வேடங்களில் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘யாவரும் நலம்’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ‘ஆதி பகவன்’ போன்ற படங்களில் நடித்தவர். அந்தப் படங்களில் வராத பெயரை இந்தப் படத்தில் பெறுவேன் எனக் கூறுகிறார். நாயகன் ஒரு வேடமேற்க நாயகியை இரு வேடமேற்க வைத்த ஆர்.கேயின் பெருந்தன்மைக்கு ஒரு சபாஷ்.