காமராஜ் படத்தின் டீசரை வெயிட்டு பேசிய மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்…இந்த படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்.
அவர் பேசும் போது”காமராஜர் மாதிரி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் இந்த நாடு எப்பொழுதோ முன்னேறி இருக்கும். அரசியலுக்கு வருகிற ஒவ்வொருவருமே ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர் பார்த்துதான் வருகிறார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி எல்லோருமே கோடி கோடியாக பணம் வைத்திருக்கிறார்கள். எல்லாமே ஊழல் பணம்தான்.
இந்த படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பிக்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் ”என்றார்.
சமுத்திரகனி பேசும் போது…. ”நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை இந்த படத்தை ஓவொரு பள்ளி குழந்தைகளும் பார்த்து எதிர்காலத்தில் காமராஜர் போல் யாரவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. இந்த படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம் ”என்றார்.
இயக்குநர்…A.பாலகிருஷ்ணன் பேசும்போது…
”இந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரை சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாக கிடைக்க வில்லை. அப்படி அவர்களது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் ”என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்த விழாவில் காமராஜராக நடித்த பிரதீப் மதுரம் மற்றும் வியோகஸ்தர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.