இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்று இயக்குநர் மு.களஞ்சியம் ஒரு படவிழாவில் வேதனை வெளியிட்டார்.
கிருஷ்ணா டாக்கீஸ் வழங்கும் ‘நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தின் இசை வெளியிட்டுவிழா இன்று நடைபெற்றது.
இயக்குநர் மு.களஞ்சியம் இசையை வெளியிட்டார். படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசும் போது” இந்தப் படவிழாவுக்கு அழைத்தபோது இது எதுமாதிரி படமாக இருக்குமோ என்று கவலையுடன் வந்தேன். குடும்பமாக இருந்து படமெடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில் எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களே நடித்து தயாரித்து இயக்கி எடுப்பார்கள். தமிழில் இப்படி யாரும் குடும்பமாக எடுப்பதில்லை. இப்படத்தின் பாடல்கள் காட்சிகள் பார்க்கும்படி உள்ளன. யுகபாரதி கவனமாக பாடல்களை எழுதியுள்ளார்.
இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து தலைகுனிந்து நிற்கிறார்கள் அப்படி நிற்கும்படியான நிலை ஒரு சிலரால் வந்துள்ளது. அப்படி ஒரு பாடல் வருகிறது.அவர்களால் அத்தனை பேரும் தமிழ்ச் சமூகத்தின் முன்னால் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கண்ணதாசன் வைரமுத்து எல்லாரும் ஆயிரக்கணக்கான தரமான பாடல்கள் எழுதியிருக்கிறர்கள்.இப்படியா எழுதினார்கள்?
தரமான சிறுபடங்களை தமிழ் மக்கள் ஏற்கத் தயங்குவதில்லை ‘நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க’ படமும் வெற்றி பெறும் ”என்றார்.
படஇயக்குநர் ல. மாதவன் பேசும்போது ”இது எனக்கு முதல் மேடை என்ன பேசுவதென்றே தெரியவில்லை.” என்று பதற்றப் பட்டார்.
நாயகி தேவிகா மாதவன் பேசும்போது”நான் ‘நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க’ பட டைட்டிலுக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ‘வால்மீகி’ க்குப்பிறகு நடிக்கும் 2 வது படம் இது .இப்பட அனுபவம் மறக்க முடியாதது” என்றார்.
நடிகர் சிங்கமுத்து பேசும்போது ” எப்படி இருந்தாலும் ‘நாலுபேரு நாலு விதமாத்தான் பேசுவாங்க’ ஒவ்வொரு விழாவிலும் இது நல்லபடம் என்றுதான் சொல்கிறோம். ஆனால் வெளியான பிறகு பார்த்தால் மோசமான படமாக இருக்கிறது. இப்போது மோசமான படங்கள்தான் அதிகம் வருகின்றன. சினிமாவை அழிக்க வேண்டும் கெடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பலபேர் படமெடுத்து வருகிறார்கள். திசை மாறிப் போகிறோமோ என்கிற பயமாக இருக்கிறது. ஒரே காட்டில்தான் சந்தன மரச்செடியும் கஞ்சா செடியும் வளருது. சந்தன மரச்செடியை போலீஸ் பாதுகாக்கிறது. . கஞ்சா செடியை தீயிட்டுக் கொளுத்துகிறது. அதுமாதிரி நல்லபடத்தை காப்பாற்ற வேண்டும். 15 வயது 20 வயது பசங்களுக்காக படமெடுத்து அவர்கள் மனசை கெடுக்க வேண்டாம். ”என்றார்.
நாயகன் இந்திரஜித், , நடிகர் லொள்ளுசபா ஜீவா, ஒளிப்பதிவாளர் டி.எஸ், வாசன், திரைப்பட எழுத்தாளர் ஏ.ஆர் வெங்கடேசன், இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய், நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர், இயக்குநர்கள் சம்பத் ஆறுமுகம், ராஜீவ்பிரசாத், ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.