இன்று ஒருசிலரே அப்படிப்பட்ட நாடக கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றார். அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.
Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார். Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றதுமட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையெற்றப்பட்டது.
பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனிதுவத்தை நிருபித்திருக்கிறார்.
தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை Y.G.மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.
குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் Y.G.மதுவந்தி.