இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிக் கதைதான் ‘தௌலத்’!

IMGL7381ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி,  சசிகலா இணைந்து தயாரிக்கும் படம்“ ‘தௌலத்’

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன். இவர் ஏற்கெனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் “பணவாசி”என்ற கன்னடப் படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா , விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  மெய்யப்பன்.எஸ்

இசை                  –  .ஏ.பி.இமாலயன்

பாடல்கள்       –  கானாபாலா, இளையராஜா

ஸ்டன்ட்        –  ஆக்ஷன் பிரகாஷ்

எடிட்டிங்         –  அருண்துரைராஜ்

தயாரிப்பு நிர்வாகம் –   போஸ்

தயாரிப்பு    –    எம்.பி..முகமதுஅலி, எம்..சசிகலா

படம் பற்றி  எழுதி இயக்கும் சஞ்சய்சிவனிடம் கேட்டோம்….

”எதிர் கால உலகையே பயமுறுத்தும் அதிநவீன ஆயுதமான போதை கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணி தான் கதை! தங்கத்தை விட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள்  பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப் படுகிறது என்பதை ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.

படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் உத்தர கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடிபெற்றுள்ளது.” என்றார்.