தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று சந்தித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசியது , ”வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது , இளையராஜா அவர்களோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதை ஒரு Tributeட்டாக நடத்தவுள்ளோம். இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது , இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும்.
இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும். இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்றபோதிலும் , நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 100 பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் பேசியது :- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழா வருகிற வியாழன் அன்று மாலை 6மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார். இவர்களுடன் துணை தலைவர் பிரகாஷ்ராஜ் , கௌரவ செயலாளர் K.E.ஞானவேல்ராஜா செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன் , எம். கபார் உடன் இருந்தார்கள்.