
உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் எழில் கூட்டணி அமைத்திற்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பானது, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திட்டமிட்டது போல் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பானது காரைக்காலிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருக்கிறது .
முழுக்க முழுக்க காமெடி களஞ்சியமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.