எனக்குத் தனியாக மேனேஜர் யாரும் கிடையாது என நந்திதா கூறியுள்ளார்.
இதோ அவரது அறிக்கை:
‘இதுவரை தனித்தனியாக அவ்வப்போது பத்திரிகை, ஊடகத்துறையினரை சந்தித்து வந்தாலும், எல்லோரும் தொடர்பு கொள்ளும் வகையில் முறையான தொடர்புச்சூழலை நான் அமைத்திருக்கவில்லை. இதை சரி செய்யும் முயற்சியின் முதல் படியே இந்த கடிதம்.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, நீங்கள் அளித்த ஆதரவு, ஆலோசனை, அன்பின் காரணமாக ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘நலனும் நந்தினியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ போன்ற படங்களில் எனது நடிப்புத்திறனை மேம்படுத்திக் கொண்டேன். தற்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் ‘இடம்பொருள் ஏவல்’, ராதாமோகன் இயக்கத்தில் ‘உப்புக்கருவாடு’, விமலுக்கு ஜோடியாக ‘அஞ்சல’ மற்றும் ‘மிர்ச்சி’ சிவாவுடன் பெயரிடப்படாத புதிய படம் என பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.
தொடர்ந்து நாம் அவ்வப்போது சந்திக்கவும், கலந்துரையாடவும் உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துகளின் வழிகாட்டுதல்களின் மூலம் என்னை சீராக செதுக்கிக்கொள்ளவும் விரும்புகிறேன். தரமான படங்களை தேர்வு செய்யவும் எனது நடிப்புத்திறனை மேம்படுத்தவும் தங்களுடைய விமர்சனங்கள் , அன்புமொழிகள் நிச்சயம் பேருதவியாக அமையும் என உளமார நம்புகிறேன்.
நம்முடைய சந்திப்புகளை சீரான விதத்தில் கையாள்வதற்காக என்னை மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். மேலும், தற்போது எனது கால்ஷீட் விவரங்களை எனது பெற்றோரை பார்த்துக்கொள்கின்றனர். எனக்கு என தனியாக மேனேஜர் யாரும் கிடையாது என்பதையும் உங்களுக்கு இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.’
இவ்வாறு நந்திதா கூறியுள்ளார்.