வனஎவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான் என்று பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பேசினார்.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை பிரசாத்70 எம் .எம் தியேட்டரில் நடந்தது. இக்கூட்டத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் நடிகர் விவேக் கௌரவ உறுப்பினராகச் சேர்ந்தார் . அதற்கான உறுப்பினர் அட்டையை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கவிதாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். பிறகு விவேக், பேசும் போது,
“ஊடகங்களுக்கெல்லாம் தாய் ஊடகம் பத்திரிகைகள்தான் அதன் பிறகுதான். ரேடியோ, டிவி இண்டர்நெட், ஈமெயில், பேஸ்புக், வாட்ஸப் இன்ன பிற கண்றாவியெல்லாம் வருகின்றன. கண்றாவியெல்லாம் என்று நான் சொல்லக் காரணம் இன்று சமூக ஊடகங்களில்எவன் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதுகிறான். படம் பார்த்து மட்டும் விமர்சனம் செய்வதையே தொழிலாகச் செய்து சம்பாதிக்கிறார்கள். பத்திரிகை என்றால் யார் எழுதியது என்று பெயர் வரும். தவறாக இருந்தால் கேட்கலாம்.சமூக ஊடகங்களில் எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான் இருட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல. கேளிக்கை ஊடகங்களுக் கெல்லாம் தாய் தாய் சினிமாதான். இதை வைத்து பலரும் வாழ்கிறார்கள்.
நான் இங்கு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி ஏனென்றால் அடிப்படையில் நான் எழுதுபவன் அப்படி எண்ணித்தான் பாலசந்தர் சாரிடம் போனேன். அவர் என்னை நடிகனாக்கி விட்டார். அவர்தான் மதுரையில் அரசு வேலை பார்த்தத என்னை சென்னை வர வைத்தவர்.அவரால் 1986ல் -ல் ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின்மூலம் அறிமுகமானேன்.இன்றுடன் வந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.
என்னை சமூகப் பணிக்கு கொண்டு போனவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் .சினிமாவில் காமெடியன் என்றால் ஏளனமாக நினைக்கிறார்கள். இன்று 75 சதவீதம் படங்களின் வெற்றிக்குக் காரணம் காமெடிக் காட்சிகள்தான். சூப்பர் ஸ்டாரே காமெடியையே நம்பு கிறார். சினிமாவில் நீளம் போதவில்லை என்றால் காமெடிக் காட்சிகள்தான் வெட்டப் படுகின்றன. ‘திருநெல்வேலி’ படத்தில் நடிகர் பிரபுவின் சிபாரிசால் காமெடியில் நடித்தேன். கருத்து சொன்னேன். அப்போது பலரும் ஏளனம் செய்தார்கள்ஆனால் பிறகு அவை வெற்றி பெற்றன. ” என்றார்.
நடிகரும் ஒளிப் பதிவாளருமான நட்டி பேசும்போது,
“பத்திரிகையாளர்களாகிய நீங்கள் நான் எது செய்தாலும் தட்டிக் கொடுத்துப் பாராட்டியிருக்கீறீர்கள். இங்கே வந்திருக்கும் விவேக் சார் சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல. சிந்திக்கவும் வைப்பவர்.. கலாம் அவர்களின் நேரடி சிஷ்யர் .அவர். நாடு பசுமையாக இருக்க விரும்புகிறவர். அவர் இங்கு இணைவதில் சங்கம். பெருமைப் படுகிறது.இதில் அவருக்கும் பெருமை.. இப்போது என் நடிப்பில் ‘போங்கு’ அடுத்து ‘ரொம்ப கெட்ட பையன் சார் இவன்’ அடுத்து ‘மிளகா–2’ என படங்கள் உள்ளன.” என்றார்.
நடிகரும் இயக்குநருமான ரவிமரியா பேசும்போது,
” பத்திரிகையாளர்களை நினைக்கும் போது எனக்கு நெகிழ்வாக இருக்கும். என்னைப்பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறீர்கள். பேட்டிகளில் எழுதியிருக்கிறீர்கள்., செய்திகளில்எழுதியிருக்கிறீர்
‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன்பேசும்போது,
“என் படம் ‘துருவங்கள் பதினாறு’ இன்று சத்யம் திரையரங்கில் 95 வது நாள். கடைசி நாள் ,கடைசிக் காட்சி ஓடி நிறைவு பெற்றது. படம் ஒருவாரம் தாங்கினால் போதும் என்று நினைத்தேன். இந்த அளவுக்கு அது வெற்றிபெற பத்திரிகைகள், ஊடகங்கள்தான் காரணம். அடுத்த படம் கௌதம் மேனன் தயாரிப்பில் இணைந்து செய்கிறேன். அரவிந்த்சாமி நடிக்கிறார். நாக சைதன்யா தமிழில் அறிமுகமாவார் என்று நினைக்கிறேன். ” என்றார்.