ஒரு கொல கொல முந்திரிக்கா கதை ‘மான்வேட்டை’

maan3மான்வேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடை பெற்றது.

படத்தின் கதை என்ன?

ஷரண் நிலாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஷரண் தன் காதலி நிலாவை அழைத்துக் கொண்டு நிம்மதியை தேடி மனிதர்களே இல்லாத… மனிதர்களே பிடிக்காத மலை பிரதேசத்திற்கு செல்கிறான். அப்போது அங்கு வரும் மனிதர்களால் இவர்கள் மிருகத்தனமாக கொல்லப் படுகிறார்கள். கொல்லப்பட்ட இவர்கள் மாபெரும் சக்தியாக மீண்டும் உயிர்பெறுகிறார்கள்.

சில நாட்களுக்கு பிறகு…

நான்கு நண்பர்கள் தங்களின் காதலிகளோடு அந்த மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். இயற்கையை ரசித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காமல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவரும் காட்டிலேயே கொல்லப்பட்டார்களா…?! இல்லை… அனைவரும் உயிருடன் தப்பித்துவிட்டார்களா…? இது தான் ரிஷ்வின் வென்ஞ்சர்ஸ் வழங்கும்  ‘மான்வேட்டை’படத்தின் கதை. மரணம் இல்லாதவன் மரணத்தை பரிசாக தருவான் இதுதான் கதையில் மிரட்டும் வாசகம்.

மான்வேட்டை

தொழில் நுட்ப கலைஞர்கள்:

எழுத்து, இயக்கம்          –    எம்.திருமலை

தயாரிப்பு                  –            ஜி.கிருஷ்ணகுமார், எம்.கமலக்கண்ணன்.

இசை                     –                 ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு                –        விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா

பாடல்கள்                 –           விவேகா, சொற்கோ, ஏக்நாத்

man1