கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான “ஒரு நாள் கூத்து” இப்படத்தில் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசை ஜஸ்டீன் பிராபகரன். இப்படத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய இருநூறு வருடம் பழமையான பாடலான எப்போ வருவாரோ பாடல் இடம்பெற்றுள்ளது இப்படத்திற்கு தனிச்சிறப்பாகும். இப்பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு மிகவும் இனிமையான இசையை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்துள்ளார்.
“ஒரு நாள் கூத்து” படத்தில் வரும் 200 ஆண்டு பழமையான பாடல்!
