சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘அன்பறிவு’ படத்தின் ட்ரெய்லர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் பிக்பாஸ் அரங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படம் அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் ஒரு படமாக உருவாகியுள்ளது.
நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.
நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷ்யம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் புதுவித பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.
“அன்பறிவு” கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப்படம் ஜனவரி 7 -ல் டிஸ்னி ப்ளஸ் HS சேனலில் வெளிவரவுள்ளது.