உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான் – M.S.Dhoni The Untold Story
M.S.Dhoni The Untold Story தூசி மிகுந்த ராஞ்சியின் சாலைகளில் துவங்கி மும்பையில் உள்ள வாங்கேடே மைதானத்தில் 2011 நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவான இந்த உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படமாகும். மகேந்திர சிங் தோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மிகச் சிறந்த மனிதர் ஆவார்.
மகேந்திர சிங் தோனி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய தந்தைக்கு தோனி நன்றாக படித்து நிலையான ஒரு வேலையில் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது கனவு. தோனி விக்கெட் கீப்பிங் செய்தால் சரியாக இருக்கும் என கணித்தவர் அவருடைய பள்ளிகூட பயிற்சியாளர் ஆவார். அதை தொடர்ந்து பல பயிற்சியாளர்கள் , நலம் விரும்பிகள் , நண்பர்கள் ஆகியோரின் ஆசியுடன் சிறு நகரத்தில் இருந்து கிளம்பிய இளம் தோனி இன்று இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்.
தோனிக்கு இந்திய திருநாட்டின் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. இப்படம் கேப்டன் தோனியின் விடா முயற்சி கடுமையான உழைப்பு மற்றும் எடுத்து கொண்ட பொறுப்பை சரியாக கவனத்தோடு செய்து முடிக்கும் திறன் ஆகியவற்றை பற்றி பேசும் ஒரு உன்னத படைப்பாகும்.