கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம். ஜெஸ்விக் சார்லி இசையமைத்துள்ளார். ஜெஸ்விக் சார்லி, இப்போது “இறையான்” படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெஸ்விக் சார்லி.
முருகன் மந்திரம் 5 பாடல்களையும் விக்டர்தாஸ் 2 பாடல்களையும் எழுதியுள்ளனர். இவர்களோடு மற்றும் தந்தை தஞ்சை டோமி, 2 பாடல்களையும் தந்தை.பன்னீர்செல்வம் 2 பாடல்களையும் எழுதி எழுதியுள்ளனர்.
திரைப்பட பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இந்த 11 பாடல்களையும் பாடி உள்ளனர். “இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்” ஜெயமூர்த்தி, “அவத்தப்பையா” யாசின் நிஸார், வேலு, கௌசிக் மேனன், ஹேமாம்பிகா, கீர்த்திகா, ஹரிதா, போன்ற பிரபலமான பின்னணிப் பாடகர்களுடன் கிறிஸ்தவ பாடல்கள் உலகில் பிரபலமான ஹேமா ஜான் ஆகியோர் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இவர்களுடன் மலையாளத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சரத்தின் மகள் வர்ஷா… குழந்தைகளுக்காக ஒரு நாடகப் பாடலை பாடியுள்ளார். இந்த நாடக வடிவிலான பாடல் குழந்தைகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த ஆல்பத்தின் இன்னொரு சிறப்பாக “ஆசை ஒரு ஆசை” பாடல், மற்றும் “அன்பு உள்ளம் காணிக்கை” ஆகிய இரண்டு பாடல்களின் கரோக்கி மைனஸ் டிராக்ஸ் (Minus Tracks) இந்த ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனைவருக்கும் பிடித்த ஆல்பமாக வந்துள்ள “பேரழகே” ஆல்பம்… சிறப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. “நம் வாழ்வு” மாத இதழின் ஆசிரியர் தஞ்சை.டோமி, அற்புதா சார்பாக “பேரழகே” ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.