எம்.ஐ.கே. புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், விமல் , தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி .
எம்.ஐ.கே. புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதும் படத்திற்கு ‘குலசாமி’ என்று பெயரிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மேலும், இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Kulasamy Motion Poster :- https://youtu.be/7cJFLKXwtZI