பத்தொன்பதாவது கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2௦15 ஆண்டுக்கான அறிமுக இயக்குநர் விருதை “லென்ஸ் “என்ற ஆங்கில படத்திற்காக பெறுகிறார் ஜெய பிரகாஷ் ராதா கிருஷ்ணன்.
இந்தியா முழுவதும் ஹிந்தி , மலையாளம் , ஆங்கிலம் , அசாமீஸ் , பெங்காலி , கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இருந்து 33 திரைப்படங்கள் தேர்வுக்காக பங்கேற்றன. இயக்குநர் திரு. சிங்கிதம் ஸ்ரீநிவாச ராவ் , திரு.வசந்த் சாய் , நடிகை ரோகினி ஆகியோர் நடுவர்களாக இருந்து லென்ஸ் எனும் திரைப்படத்தை சிறந்த அறிமுக இயக்குநருக்கான திரைப்படமாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.
லென்ஸ் திரைப்படம் skype மூலம் உரையாடும் இரண்டு வெவ்வேறு பின்னணியை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய திரைப்படம். முன் அறிமுகம் இல்லாத இரண்டு பேரின் உரையாடலால் நேரும் கடத்தல் சம்பவம் மற்றும் அதை சார்ந்த கதை இது. இதில் அறிமுக இயக்குநரான ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அரவிந்த் என்ற முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவுள்ளது. கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது வழங்கும் விழாவில் 1,5௦௦௦௦ ருபாய் மற்றும் நினைவு கேடயமும் பரிசாக வழங்கப்படவுள்ளது .
கடந்த பதினெட்டு வருடத்தில் இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய பிரமுகர்கள் மேச்செர்ஸ் சுனில் தத் , ஜெயா பச்சன் , நசிருதீன் ஷா , மிருணாள் சென் , கோவிந்த் நிஹிலானி , மணிரத்னம் , சேகர் கபூர் , அடூர் கோபாலகிருஷ்ணன் , அபர்ணா சென் , மம்மூட்டி , அக்கினேனி நாகேஸ்வர ராவ் , தாசரி நாராயண ராவ் , சுப்புராம ரெட்டி , ஷோபனா, ஷர்மிளா தாகூர் , அமிர்கான் , கௌதம் கோஷ் ,அணில் கபூர் , வித்யா பாலன் , மதூர் பாண்டர்கர் , விஷால் பரத்வாஜ் , சத்ருகன் சின்ஹா , லக்ஷ்மி , பாலு மகேந்திரா , ரிஷி கபூர் , கௌதம் வாசுதேவ் மேனன் , சிரஞ்சீவி , பாராஹகான் , கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ்.
இந்து விருது ஆழமாக சிந்தித்து , கடுமையாக உழைத்து தங்கள் முதல் படைப்பை எடுக்கும் இயக்குநர்களுக்கானது. இவ்வாறு வெற்றி பெறும் இயக்குநர்களை தங்கள் குடும்பத்தின் பிள்ளையாக நினைத்து ஊக்குவிக்கிறது. இந்த விருது இந்திய அளவிலான முதல் பட இயக்குநர்களுக்கானது , இவ்விருது அவர்களுக்கு அங்கீகாரமாகவும் , ஊக்கமாகவும் அமைந்துள்ளது இதன் சிறப்பு.
இவ்விருது விழாவில் இந்திய சினிமாவின் ஜாம்பாவான்கள் பலர் கலந்து கொண்டு , உரையாற்றி வருகின்றனர். இவ்வுரை இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது .கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு சொற்பொழிவு நிகழ்வின் சிறப்பம்சமாகும். இந்த உரை நூலாகவும் வெளிவரவுள்ளது.