
அதற்கு உதாரணம் தான் இந்த வெள்ளோட்டம். மேலும் இந்த படத்திற்கு காஞ்சனா 2 புகழ் லியான் ஜேம்ஸ் இசையமைக்க ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெள்ளோட்டத்தை பற்றி எல்ரெட் குமார் கூறுகையில், ” இந்த படத்தில் பாபி சிம்ஹா ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து தனக்கான வேடத்தை முழுமையாக சிறப்பித்திருக்கிறார். இந்த வெள்ளோட்டம் கண்டிப்பாய் அனைவரது எதிர்ப்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவும் அன்பும் தான் எங்களின் உண்மையான வெற்றி ” என்றார்.