
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 26ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை தலைவர் கிறிஸ்டோபர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றி பின்னர் பட்டங்களை வழங்கினார்.
உடன் இஸ்ரோ திட்டப்பணி இயக்குநர் வி.நாராயணன், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் மரீஜான்சன், சார்வேந்தர் மரியஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 58 ஆராய்ச்சி மாணவர்கள், 284 பட்ட மேற்படிப்பு மாணவர்கள், 96 பல் மருத்துவ மாணவர்கள், 2392 இளநிலை பொறியாளர்கள் உட்பட சுமார் 3000 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மேலும் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தில் அறிவியல் சார்ந்த நிரந்தர கண்காட்சி டி.ஆர்.டி.ஓ சார்பில் அமைக்கப்படும் என்றும் மேலும் அதே இடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை ஈர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்றும் டி.ஆர்.டி.ஓ தலைவர் கிறி
ஸ்டோபர் பேட்டியளித்தார்.
